’இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தாது’ உலக சுகாதார மையம் சொல்வது எதை?

 

’இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தாது’ உலக சுகாதார மையம் சொல்வது எதை?

கொரோனா சூழ் உலகமாகி விட்டது. பல நாடுகளில் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தாவிக்கொண்டே, பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது கொரோனா.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 72 லட்சத்து 36 ஆயிரத்து 335 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 97 லட்சத்து 22 ஆயிரத்து 802 நபர்கள்.

’இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தாது’ உலக சுகாதார மையம் சொல்வது எதை?

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 65 ஆயிரத்து 634 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,16,47,899 பேர்.

கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என காத்திருக்கும் நிலையில் உலகம் உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்து விட்டது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசிகள் குறித்த அப்டேட்டுகளைக் கொடுத்து வந்தாலும், இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு அது வரவில்லை என்பதே யதார்த்தம்.

’இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தாது’ உலக சுகாதார மையம் சொல்வது எதை?

இந்நிலையில் கொரோனா சிசிக்சை அளிக்க ரெம்டெசிவர் மருந்தை மருத்துவர் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், ரெம்டெசிவர் மருந்து கொரோனா நோயைக் குணப்படுத்தாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதை கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவித்தியுள்ளது. ஏழாயிரத்திற்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளிடம் ரெம்டெசிவர் மருந்தை அளித்து சோதித்து பார்த்ததில் உலக சுகாதார மையம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இதனால், இந்த மருந்தைப் பயன்படுத்தி வந்த நாடுகள் திகைத்து நிற்கின்றன.