Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?

கொரோனா வைரஸ்… நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது என அரசாங்கமும், சுகாதாரத்துறையும் சொல்லும் வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். அதேநேரத்தில் எளிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம்நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?
எதிர்ப்பு சக்தி:
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு சில உடல்நலக்குறைவு உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்களையே கொரோனா வைரஸ் எளிதாகத் தொற்றும். ஆகவே, அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

காலையில் நாம் அருந்தும் காபி, டீக்குப் பதிலாக கிராம்பு குடிநீர் அல்லது இஞ்சி, மிளகு, துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். அதன்பிறகு தேவைப்பட்டால் சீந்தில்கொடி என்ற மூலிகையுடன் மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள், கிராம்பு, வேப்ப இலை அல்லது வேப்பங்குச்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்கலாம். இதை மாலை வேளையிலும்கூட அருந்தலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?
சீந்தில் கசாயம்:
நன்றாக முற்றிய சீந்தில் கொடி 35 கிராம், கொத்தமல்லி (தனியா), சுக்கு தலா 20 கிராம், அதிமதுரம், சோம்பு தலா 10 கிராம் சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும். இவற்றை ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து கால் லிட்டரானதும் எடுத்து வடிகட்டி காலை, மாலை என மூன்று நாட்கள் குடித்து வந்தால் செரிமானக்கோளாறு, வயிறு உப்புசம், நாள்பட்ட வாதம் போன்ற பிரச்சினைகளும் சரியாகும்.

காய்ச்சலின்போது வெறும் கசாயமாக குடிப்பதோடு நின்றுவிடக்கூடாது. தலைவலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூழலில் ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களின் சாறுகளைக் குடிக்க வேண்டும். இது தொண்டைப்புண், தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும். அதுமட்டுமல்லாமல் உடலில் உப்புத்தன்மை அதிகமாகி நச்சுத்தன்மை அதிகரித்தால் அதை சமநிலைப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?ஆரஞ்சுச் சாறு:
ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் சேர்த்து அருந்தினால் ஜலதோஷம் குணமாகும். இதேபோல் சளி, ஆஸ்துமா, காச நோய், தொண்டைப்புண்ணால் பாதிக்கப்பட்டிருந்தால் 125 மில்லி ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் தேன், உப்பு சேர்த்து அருந்தினால் நுரையீரல் கோளாறுகள் சரியாகும்.

ஆரஞ்சுப்பழத்தின் தோலுக்கும் மருத்துவக் குணங்கள் மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. எனவே, ஆரஞ்சுப் பழத்தோலுடன் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், வெங்காயம், பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து தாளித்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் மஞ்சள்தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்தால் ஆரஞ்சுப் பழத்தோல் ரசம் தயார். இதையும் அருந்தலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?பூண்டுப்பால்:
மூக்கடைப்பு, ஜலதோஷம் இருந்தால் விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசித்தால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். ஆடாதொடை கசாயம் அருந்தினால் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். குறிப்பாக ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் விலகும்.

இரவு தூங்குவதற்குமுன் வெள்ளைப்பூண்டு பற்களை 50 மில்லி பால், 50 மில்லி பால் சேர்த்து வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் தலா ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து குடிக்கலாம். இதனால் நெஞ்சுச்சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா தொந்தரவுகளும் சரியாகும்.

மாலைவேளைகளில் சுக்கு வெந்நீர் அருந்தலாம். பகல் உணவில் சின்னவெங்காயம் சாப்பிடுவதும் சிறப்பு. நிறைய தண்ணீர் குடிப்பது, ஆவியில் வெந்த உணவுகள், நன்றாகக் குழைந்த உணவுகளை உண்பதும் நல்லது. வயிற்றுக்கோளாறுகளில் இருந்து காத்துக்கொள்ள கைப்பிடி புதினா, சின்னத்துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து அரை எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்து சேர்க்க வேண்டும். இதனுடன் தேன், சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...

சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

திடீரென சமோசா விலை உயர்ந்ததால் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம்...

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisment -
TopTamilNews