அதிமுக வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்கள் என்னென்ன?

 

அதிமுக வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்கள் என்னென்ன?

அதிமுக பொதுக்குழுவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அதிகாரங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்கியது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் – ஈபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் 1 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு அங்கீகாரம் மற்றும் அதிகாரம் என்னென்ன என்பதும் அறிவிக்கப்பட்டது.

அதிமுக வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்கள் என்னென்ன?

அதிகாரங்கள் என்னென்ன?

  • அதிமுக வழிகாட்டுதல் குழுவில் அதிகபட்சம் 11 பேர் மட்டுமே இடம் பெற வேண்டும்;
  • வழிகாட்டுதல் குழுவில் உள்ள 11 பேரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நியமிக்கவோ, நீக்கவோ முடியும்.
  • 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்
  • 11 பேர் 5 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர், மீண்டும் அதே பொறுப்புக்கு நியமிக்க தடை ஏதுமில்லை.
  • கட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்குதல்
  • கொள்கைகள் வடிவமைத்தல், ஆகியவை வழிகாட்டுதல் குழுவின் பணிகளாகும்.

11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில்
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்.காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.சி.டி பிரபாகர், முன்னாள் எம்.பி பி.எச் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் உள்ளனர்.