பழங்களின் தோலில் இத்தனை மருத்துவக் குணங்களா?

 

பழங்களின் தோலில் இத்தனை மருத்துவக் குணங்களா?

பழத்தோல்… பழங்களில் மருத்துவக் குணம் உள்ளதைப்போல பல பழங்களின் தோலிலும் நிறைய மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. மிகச் சாதாரணமாக ஜூஸ் செய்வதற்குப் பயன்படுத்தும் எலுமிச்சைப் பழத்தில் இருந்து ஆரஞ்சு, ஆப்பிள் என பல பழங்களின் தோல்கள் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளிலிருந்து தீர்க்கும்.

பழங்களின் தோலில் இத்தனை மருத்துவக் குணங்களா?எலுமிச்சை:
எலுமிச்சைப் பழத்தில் வைட்டமின் சி சத்து இருக்கிறது என்பது நாமனைவரும் அறிந்த விஷயம். அதன் அடிப்படையில் எலுமிச்சையை பிழிந்து அதன் சாற்றுடன் நீர் மற்றும் இனிப்பு சேர்த்து அருந்துகிறோம். ஆனால், உண்மையில் எலுமிச்சையின் தோலில்தான் உடலுக்கு நன்மைகள் தரும் அதிக சத்துகள் உள்ளன.

எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி அதன் சாற்றை பிழிந்து எடுத்துவிட்டு தோலை மட்டும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிய அளவு தோல் நீக்கிய இஞ்சியை சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிட வேண்டும். ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து 30 நாள் குடித்தால் இதய அடைப்பு நீங்கிவிடும்.

பழங்களின் தோலில் இத்தனை மருத்துவக் குணங்களா?ஆரஞ்சு:
எலுமிச்சையின் தோலில் உள்ள அமிலம் மனிதனின் சருமத்தை மிருதுவாக்க உதவும். குறிப்பாக சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை அகற்றி புதிய செல்கள் வளரத் தூண்டும். இதேபோல் எலுமிச்சையின் தோலை நன்றாகக் காய வைத்துப் பொடியாக்கி அதனுடன் தேன், ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தேய்த்தால் சருமம் பொலிவாகும்.

ஆரஞ்சுப் பழத்தின் தோலை பசைபோன்று நன்றாக அரைத்து அதைக்கொண்டு பற்களில் தேய்த்தால் கறைகளும், பல் கூச்சமும் நீங்கும். அதேபோல் வேப்பங்கொழுந்துடன் ஆரஞ்சுப் பழத்தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் சேர்த்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவினால் கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைந்துவிடும்.

பழங்களின் தோலில் இத்தனை மருத்துவக் குணங்களா?ஆப்பிள், வாழை:
ஆப்பிள் பழத்தை அதன் தோலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆனால், இன்றைக்கு ஆப்பிள்மீது மெழுகு தடவுவது, பூச்சிக்கொல்லிகள் அடிப்பது போன்றவற்றால் இவை அல்லாத ஆப்பிளைச் சாப்பிடுவதே நல்லது. ஆப்பிளின் தோலில் கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.

வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு பல் தேய்த்து வந்தால் பற்கள் வெண்மையாகும். வறட்சியான சருமத்தின்மீது வாழைப்பழத் தோலை தேய்த்து வந்தாலும் பலன் கிடைக்கும். மாம்பழத்தின் தோலைக் கூழாக அரைத்து பால் சேர்த்து முகத்தில் பூசினால் கருவளையம், முகப்பரு நீங்கும். இதே கலவையுடன் தேன் கலந்து கழுத்துப் பகுதியில் காணப்படும் கருந்திட்டுகள்மீது பூசினால் நாளடைவில் கருமை நீங்கும்.