மேற்கு வங்கத்தில் லாக்டவுனை நீட்டிப்பு.. சலூன்கள் திறக்கலாம் ஆனால் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்

மேற்கு வங்கத்தில் லாக்டவுனை நீட்டிப்பு.. சலூன்கள் திறக்கலாம் ஆனால் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்

மேற்கு வங்க அரசு லாக்டவுனை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதேசமயம் கூடுதலாக தளர்வுகளையும் அறிவித்துள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதனையடுத்து மாநில அரசுகள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து சில தளர்வுகளுடன் லாக்டவுனை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் லாக்டவுனை நீட்டிப்பு.. சலூன்கள் திறக்கலாம் ஆனால் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்
ஊரடங்கு

மேற்கு வங்க அரசு அறிவித்துள்ள சில தளர்வுகள்: ஜூலை 1ம் தேதி முதல் 50 சதவீத இருக்கை பயன்பாடுடன் பஸ்கள் இயக்க அனுமதி. திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேர் பங்கேற்க அனுமதி. காய்கறி சந்தைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி செயல்படலாம். வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி செயல்படும்.

மேற்கு வங்கத்தில் லாக்டவுனை நீட்டிப்பு.. சலூன்கள் திறக்கலாம் ஆனால் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்
பஸ் போக்குவரத்து

உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத திறனுடன் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். தனியார் மற்றும் பெருநிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். 50 சதவீத இருக்கை திறன்களுடன் சலூன்கள் மற்றும் அழகுநிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம், அதேசமயம் பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்