மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா காலமானார்… ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்

 

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா காலமானார்…  ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா. கடந்த சில தினங்களுக்கு முன் 78 வயதான சோம் மித்ராவுக்கு வழக்கமான பரிசோதனைகள் செய்தபோது கிரியேட்டின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் இதயம் மற்றும் வயது தொடர்பான வியாதிகள் காரணமாக நேற்று அதிகாலையில் அவர் மரணம் அடைந்தார். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது என மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா காலமானார்…  ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்
சோமன் மித்ரா மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். ராகுல் காந்தி டிவிட்டரில், இந்த கடினமான நேரத்தில் சோமன் மித்ராவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது அன்பும் ஆதரவும், அவரை அன்பு,பாசம் மற்றும் மரியாதையுடன் நினைவில் கொள்வோம் என பதிவு செய்து இருந்தார். காங்கிரஸ் எம்.பி.யும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான கவுரவ் கோகாய் டிவிட்டரில், சோமன் மித்ராவின் குடும்பத்திற்கு என் இதயம் செல்கிறது. அவர் வங்காளத்தின் ஒரு மாபெரும் மனிதர். அவர் தனது நீண்ட பயணத்தில் பல மில்லியன் மக்களின் வாழ்க்கையை தொட்டார். அவரது குடும்பத்தினருக்கும் அவரை பாராட்டிய அனைவருக்கும் எனது இரங்கல். அவரது மரபு மறக்கக்கூடாது என பதிவு செய்து இருந்தார்.

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா காலமானார்…  ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்

சோமன் மித்ரா மேற்கு வங்க காங்கிரசின் தலைவராக 3 முறை இருந்தவர். 1992-96, 1996-98 மற்றும் 2018 டிசம்பர் முதல் காங்கிரசின் தலைவராக பதவி வகித்தவர். தீவிர காங்கிரஸ்காரராக இருந்த சோமன் மித்ரா 2008ல் அந்த கட்சியிலிருந்து விலகி தனியாக பிரகதிஷீல் இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் அந்த கட்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டு 2009 மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். 2014ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தார். 2018 செப்டம்பர் முதல் அம்மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார்.