பி.எஸ்.என்.எல். முதல் நிலக்கரி வரை எல்லாவற்றையும் விற்பனை செய்யும் மோடி அரசு… மம்தா பானர்ஜி தாக்கு

பி.எஸ்.என்.எல். முதல் நிலக்கரி வரை எல்லாவற்றையும் விற்பனை செய்யும் மோடி அரசு… மம்தா பானர்ஜி தாக்கு

பி.எஸ்.என்.எல். முதல் நிலக்கரி வரை எல்லாவற்றையம் மோடி அரசு விற்பனை செய்கிறது என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று ஹஸ்ரா மோரிலிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள அம்மாநில தலைமை செயலகத்துக்கு மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்தார். எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அம்மாநில அமைச்சரும், கொல்கத்தா மேயருமான பிர்ஹாத் ஹக்கீம் ஓட்ட பின் இருக்கையில் மம்தா பானர்ஜி அமர்ந்து இருந்தார்.

பி.எஸ்.என்.எல். முதல் நிலக்கரி வரை எல்லாவற்றையும் விற்பனை செய்யும் மோடி அரசு… மம்தா பானர்ஜி தாக்கு
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகம் அடங்கிய ஒரு பேனரையும் கழுத்தில் தொங்கவிட்டு இருந்தார். எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தலைமை செயலகத்துக்கு வந்த பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாட்டில் உள்ள அனைத்தையும் விற்பதாக குற்றம் சாட்டினார்.

பி.எஸ்.என்.எல். முதல் நிலக்கரி வரை எல்லாவற்றையும் விற்பனை செய்யும் மோடி அரசு… மம்தா பானர்ஜி தாக்கு
எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்யும் மம்தா

பி.எஸ்.என்.எல். முதல் நிலக்கரி வரை நாட்டில் உள்ள அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான அரசாங்கம் என்று மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி பேசினார். மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளநிலையில், எரிபொருள் விலை உயர்ந்து வருவது பா.ஜ.க.வுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.