பல அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநிலத்துக்கு வருகிறார்கள்… அமித் ஷாவை தாக்கிய மம்தா பானர்ஜி

 

பல அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநிலத்துக்கு வருகிறார்கள்… அமித் ஷாவை தாக்கிய மம்தா பானர்ஜி

பல அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநிலத்துக்கு வருகிறார்கள் என்று பா.ஜ.க.வின் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறைமுகமாக தாக்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடியும்வரை, அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் மாதந்தோறும் மாநிலத்துக்கு வருவார்கள் என்று மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் தெரிவித்து இருந்தார். இந்த சூழ்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற சாத் பூஜையில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பல அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநிலத்துக்கு வருகிறார்கள் என்று மறைமுகமாக அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை தாக்கினார். அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

பல அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநிலத்துக்கு வருகிறார்கள்… அமித் ஷாவை தாக்கிய மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பல அரசியல்வாதிகள் உங்கள் (மக்கள்) அனைவரையும் தேர்தல் நேரத்தில் மட்டுமே சந்தித்து பேசுவார்கள். இன்று நான் இந்த விழாவை உங்களுடன் கொண்டாட வந்திருக்கிறேன். நான் ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை, காளி பூஜை, ஈத் மற்றும் சாத் பூஜைகளில் கலந்து கொள்கிறேன். இது என்னுடைய பாரம்பரியம். ஒவ்வொரு ஆண்டும் நேதாஜி விளயைாட்டு கழகம் தக்தா காட்டில் சாத் பூஜை விழாக்களை ஏற்பாடு செய்கிறது. இந்த ஆண்டும் ஏற்பாடு செய்தற்கு அவர்களுக்கு நன்றி.

பல அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநிலத்துக்கு வருகிறார்கள்… அமித் ஷாவை தாக்கிய மம்தா பானர்ஜி
பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

இந்த கோவிட்-19 தொற்றுநோய் சமயத்திலும் நான் துர்கா பூஜை, காளி பூஜை, ஈத் மற்றும் சாத் பூஜைகளை நான் கொண்டாடி வருகிறேன். நீதிமன்றங்கள் வழங்கிய கோவிட்-19 வழிகாட்டுதல்களை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். நான் மலைத்தொடரின் தண்ணீரில் நின்று பிரார்த்தனை செய்தேன். உலகம், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அனைத்து மக்களுக்கும் ஆசீர்வாதத்தை பொழிவதற்கு பிரார்த்தனை செய்தேன். கோவிட்-19 தொற்றுநோய் நம் நாட்டிலிருந்து மறைந்துபோகும்படி நான் பிரார்த்தனை செய்தேன். கலவரத்தை தூண்டும் மக்கள் நம் நாட்டிலிருந்து ஓட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். வறுமை நீங்கவும் பிரார்த்தனை செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.