மேற்கு வங்கத்தில் லாக்டவுன் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிப்பு.. கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

மேற்கு வங்கத்தில் லாக்டவுன் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிப்பு.. கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

மேற்கு வங்கத்தில் லாக்டவுன் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்கள் லாக்டவுனை அமல்படுத்தின. தற்போது கொரோனா வைரஸ் பரவல் ஒரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில் கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

மேற்கு வங்கத்தில் லாக்டவுன் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிப்பு.. கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
பினராயி விஜயன்

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், பிராந்தியத்தின் கோவிட்-19 நிலைமையை பொறுத்து, பிராந்திய வாரியாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஜூன் 16ம் தேதிக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகளால் லாக்டவுன் அமல்படுத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பு நாளை (இன்று) வெளியிடப்படும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக 7,719 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது, மேலும் 161 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் லாக்டவுன் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிப்பு.. கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் கொரோனா லாக்டவுன் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார். அரசு அலுவலகங்கள் 25 சதவீத பணியாளர்களுடனும், தனியார் மற்றும் பெறுநிறுவன அலுவலகங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதி உள்பட சில தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.