Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?

உடற்பயிற்சி இன்மை, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், உடல் உழைப்பு இன்மை போன்ற காரணங்களால் உடல் பருமன் எல்லோருக்குமான பிரச்னையாக மாறிவிட்டது. அதிலும் லாக்டவுன் வொர்க் ஃபிரம் ஹோமுக்குப் பிறகு உடல் எடை அதிகரித்தவர்கள் அதை குறைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம், மூட்டு வலி உள்ளிட்ட பல உடல் நலப் பிரச்னைக்கு உடல் பருமன் காரணமாக இருக்கிறது. இது தவிர அழகு, ஃபிட்னெஸ் குறைவதால் தன்னம்பிக்கையும் குறைகிறது.

உடல் எடையைக் குறைக்க உணவு கட்டுப்பாடு மட்டும் அல்லது அதீத உடற்பயிற்சி என்று இறங்கி ஒரு சில நாட்களில் அதை கைவிடுபவர்கள் அதிகம்.

உடல் எடை குறைக்க உணவு கட்டுப்பாடு தேவையில்லை. ஆனால், என்ன சாப்பிடுகிறோம் என்று கவனித்தாலே போதும். நாம் சாப்பிடும் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. சாப்பிட்ட உடனே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்துவிடுகிறது.

இதற்கு பதில் காய்கறி சாலட், காய்கறி பொரியல் போன்றவற்றை எடுக்கும்போது உடலுக்குத் தேவையான நார்ச்சத்து உள்ளிட்டவை கிடைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிப்பதும் தடைபடுகிறது.

வண்ணமயமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். தட்டில் அரிசி சாதத்தின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். கூட்டு பொரியல் அளவுக்கு சாதமும், சாதம் அளவுக்கும் கூட்டு பொரியல், கீரை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சாப்பாட்டில் 50 சதவிகிதம் காய்கறிகள், 25 சதவிகிதம் முழு தானியம் 25 சதவிகிதம் புரதச்சத்து நிறைந்த உணவாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதாவது காய்கறிகள், பழங்கள், மீன், முளைக்கட்டிய பயிறு, சிவப்பு – பழுப்பு அரிசி சாதம், ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை

எண்ணெய்யில் பொறித்த உணவுகள், சர்க்கரை நிறைவாக உள்ள உணவு.

ரெட் மீட், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பேக்கிங் உணவுகள், வெள்ளை பிரட், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு உணவையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அதன் கிளைசமிக் இன்டெக்ஸ் என்ன என்று பார்க்க வேண்டும்.

கிளைசமிக் இன்டெக்ஸ் 55 அல்லது அதற்குக் கீழ் உள்ள உணவுகள் மிகவும் நல்லது. 56 முதல் 69க்கு உட்பட்ட உணவுகள் நடுத்தரமானவை. 70க்கு அதிகமாக உள்ள உணவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் சிந்தனை – அமித்ஷா

விழுப்புரத்தில் சிங்காரவேலர் சிலைக்கு அடிக்கல் நாட்டி, உருவப்படத்தை திறந்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார் அதன்பின் அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில்...

கோயில் திருவிழாவில் தொழிலாளி மீது தாக்குதல் – 5 பேர் கைது

தென்காசி தென்காசி அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். தென்காசி மாவட்டம்...

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தற்போது அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது உருமாறிய...

துணை வாக்குச்சாவடி மையங்களில், தஞ்சை ஆட்சியர் நேரில் ஆய்வு!

தஞ்சை தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள துணை வாக்குச்சாவடி மையங்களை, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
TopTamilNews