வார இறுதியில் ஊரடங்கு… மால்கள், தியேட்டர்கள் செயல்படாது : அதிரடி உத்தரவு!

 

வார இறுதியில் ஊரடங்கு… மால்கள், தியேட்டர்கள் செயல்படாது : அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு லட்சமாக பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு இன்று 2 லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா மரணங்களும் ஆயிரத்தை கடந்து விட்டது. இவ்வாறு இரண்டாம் அலை அசுர வேகத்தில் பரவி வருவதைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை கையிலெடுத்துள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வார இறுதியில் ஊரடங்கு… மால்கள், தியேட்டர்கள் செயல்படாது : அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், டெல்லியில் வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வார இறுதி நாட்களில் தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் உள்ளிட்டவை செயல்படாது. ஹோட்டல்களில் பார்சல் வழங்க அனுமதிக்கப்படும். வார இறுதி நாட்களில் செயல்பட்டு வந்த மார்க்கெட்டுகள் இனி வார நாட்களில் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் ஊரடங்கு… மால்கள், தியேட்டர்கள் செயல்படாது : அதிரடி உத்தரவு!

தொடர்ந்து பேசிய அவர், இந்த கட்டுப்பாடுகள் மக்களுக்கு சிரமமாக இருக்கும். ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லை. இத்தகைய கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால் தான் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் கூறியுள்ளார். டெல்லியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை எட்டியுள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.