Home ஆன்மிகம் புத்தி சுத்திகரிப்புக்கு புதன் வழிபாடு!

புத்தி சுத்திகரிப்புக்கு புதன் வழிபாடு!

புதன் கிழமையானது உள்ளத்தின், மனத்தின் சுத்திகரிப்பு நாளாக விளங்குகின்றது. புதன்கிழமை விரதம், ஞானத்தையும் அமைதியையும் வழங்குவதோடு, எல்லா மகிழ்ச்சியையும் அடைய உதவுகிறது. மனிதனின் வாழ்வு இந்த கலியுகத்தில் தினசரி உணவையே நம்பி இருக்கிறது. எனவே, உணவு சுத்தமாக இருந்தால்தான் உடல், மனம், உள்ளம், புத்தி, அறிவு இந்த ஐந்தும் சுத்தமாக இருக்கும். தற்போது இருக்கும் பரபரப்பு சூழலில் சமைக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கோம். ஹோட்டல் சாப்பாடு, வெளி சாப்பாடு உடலை, மனதை ஒளி இழக்கச் செய்கிறது. வாரத்தின் நடுநாளான புதன் கிழமையாவது சுத்தமான உணவை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். மேலும், உடலும் மனமும் உற்சாகத்துடன் இருக்கும்.

கொரோனா தொற்றால் பள்ளிக்கூடங்கள் திறக்காததால் பாடங்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் அலுவலகங்கள் திறக்காததால் எல்லோரும் வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதால் அலைகற்றைகளின் அதிர்வுகளோடே எந்நேரமும் இருக்கின்றோம். அதிலும், குழந்தைகளுக்கு இந்த கதிர்வீச்சு அவர்களின் கண் மற்றும் மனநலத்தை ஏற்படுவதற்கு நிறைய வாய்புகள் உள்ளதாக மருத்துவர்களும் அறிஞர்களும் கூறுகிறார்கள். வருங்காலத்தில், செல்போனால் ஏற்படும் நோய்கள், நிறையப் பெருகும் என்பதால் புதன் கிழமையன்றும், சப்தமித் திதி நாளிலும் ஆற்றும் பூஜைகளே இதன் பாதிப்புகளை ஓரளவு

தணிக்க உதவும். குறைந்தது ஐந்து மணி நேரம் விளக்குகளை ஏற்றி வைத்தல், சாம்பிராணி தூபம், ஊதுபர்த்திகளைத் தினந்தோறும் ஆலயத்திலும், இல்லத்திலும் ஏற்றி வைத்து வழிபடுதல் மூலம் நாம் வாழும் தெரு மாநிலம், நாட்டிற்கு மட்டுமல்லாது விண்வெளியையும் சுத்திகரிப்பு செய்யமுடியும். பிற ஜீவராசிகளுக்காகவும் விளக்கேற்றுங்கள்! வீட்டில் விளக்கு ஏற்றும்போது நமக்காக ஒன்றும், பிற ஜீவராசிகளுக்காக ஒன்றும் என இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடவும். வசதி இல்லாதவர்கள், ஒரே விளக்கில் இரண்டு திரிகளைத் தமக்காகவும், மூன்றாவதைப் பிற ஜீவன்களுக்காகவும் ஏற்றிட வேண்டும். புதன் கிழமை அனைவரும் குறைந்தது இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடுவது சிறப்பானதாகும்.

பஞ்ச பூத விளக்கு பூஜையும் புதனும்!

பஞ்ச பூத விளக்குப் பூஜையை நிகழ்த்திட, புதன் கிழமை மிகவும் ஏற்றதாகும். உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களால் ஆனவை ஆதலின், இவற்றைப் பஞ்ச பூத சக்திகளால் சுத்திகரிப்பதற்காக, கோவில்களிலும், வீடுகளிலும் புதன் கிழமை தோறும் ஐந்து விளக்குகளை ஏற்றிப் பூஜித்தல் சிறப்புடையதாகும்.

புதன் கிழமை தோறும் உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஐந்தையும் சுத்திகரிக்க உதவிடுவதாக, கைகளால் அரைத்துக் காய வைத்த சந்தனத் தூள், அத்தர், புனுகு, ஜவ்வாது, புனுகு ஆகிய ஐந்தையும் கலந்த திரவியப் பொடியைச் சாம்பிராணி தூபத்தில் அவ்வப்போது நறுமணம் நிறைய கோயில்களிலும், வீடுகளிலும் தூபம் இட்டு வந்தால் மனக் குழப்பங்கள் நீங்கி, மனம் சிறிது, சிறிதாக அமைதி பெறுவதை நன்கு காணலாம்.

இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். புதன்கிழமை நரசிம்மர் கோவிலுக்கு சென்று பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு

-வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

மாதவிலக்கு காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஸ்மூத்தி!

பொதுவாக பழங்களை கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. சில சமயங்களில் சர்க்கரை சேர்க்காமல் பழங்களை அரைத்து ஸ்மூத்தி போன்று எடுத்துக்கொள்ளலாம். ஐந்து பழங்களை ஒன்று சேர்த்து ஸ்மூத்தி...

ஹார்ட் அட்டாக் தவிர்க்க இந்த 5 விஷயத்தில் அலர்ட் தேவை!

உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு. ஹார்ட் அட்டாக் காரணமாக திடீர் திடீர் என்று நெருக்கமானவர்கள் உயிரிழப்பது பற்றிய செய்தியைக் கேட்டாலும் கூட அதில்...

அதிமுகவுக்கு மேலும் ஒரு செய்தித்தொடர்பாளர் நியமனம்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார் பேராசிரியர் ச. கல்யாண சுந்தரம். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்...

அமைச்சர் காமராஜூக்கு சீரியஸ்! மருத்துவமனைக்கு படையெடுத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா நோய் தொற்றுக்காரணமாக கடந்த 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் சிகிச்சை்காக...
Do NOT follow this link or you will be banned from the site!