திருமணத்திற்கு செல்ல அனுமதி கிடையாது… இ-பதிவு இணையதளத்திலிருந்து நீக்கம்!

திருமணத்திற்கு செல்ல அனுமதி கிடையாது… இ-பதிவு இணையதளத்திலிருந்து நீக்கம்!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய இ-பாஸ் நடைமுறையைப் போல் அல்லாமல் இணையளத்தில் பதிவுசெய்தாலே போதுமானது.

திருமணத்திற்கு செல்ல அனுமதி கிடையாது… இ-பதிவு இணையதளத்திலிருந்து நீக்கம்!

இ-பாஸ் பெற வேண்டிய அவசியமில்லை. பதிவுசெய்துவிட்டு தகுந்த ஆதாரங்களுடன் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் இ-பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு செல்ல அனுமதி கிடையாது… இ-பதிவு இணையதளத்திலிருந்து நீக்கம்!

இச்சூழலில் திருமணத்திற்குச் செல்வதற்கான அனுமதி தற்போது மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இணையதளத்தில் திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, திருமணத்திற்காக அதிகம் பேர் விண்ணப்பித்து பயணிக்கின்றனர்; இதனால் தற்காலிகமாக இ-பதிவு இணையதளத்தில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.