தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வெதர்மேன்

 

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வெதர்மேன்

தமிழகத்தில் கத்திரி வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இது போதாதென்று, வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தையும் இழுத்து சென்று விட்டது. இதனால் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இருப்பினும் வெப்ப சலனத்தால் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வெதர்மேன்

இது குறித்து பேசிய அவர், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வைபய் இருப்பதாகவும் கேரளா மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கடலோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு கிடையாது என்றும் கூறினார். மேலும், தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று குறிப்பாக சொல்ல இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.