மிரட்டும் கொரோனா… மாஸ்க் அணிவது சமூக இடைவெளியைக் குறைக்க உதவும்!

 

மிரட்டும் கொரோனா… மாஸ்க் அணிவது சமூக இடைவெளியைக் குறைக்க உதவும்!

மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. என்ன ஆனாலும் ஊரடங்கு வராது என்ற நம்பிக்கையில் மக்களும் கொரோனா பயம் துளியும் இன்றி நடமாடி வருகின்றனர்.

மிரட்டும் கொரோனா… மாஸ்க் அணிவது சமூக இடைவெளியைக் குறைக்க உதவும்!

கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் அது நுரையீரல், கல்லீரல், இதயம், கண்கள், மூளை என உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பதம்பார்த்து வைத்துவிட்டுதான் செல்கிறது என்று ஒவ்வொரு ஆய்வாக வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் மக்கள் கொரோனா கவலை இன்றி இருப்பது நல்லது இல்லை என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் சமூக இடைவெளியை ஓரளவுக்கு மக்கள் மதித்தனர். ஆறு அடி இடைவெளி விட்டு நிற்பது, மற்றவர்களுடன் கைக்குளுக்காமல், நெருங்காமல் தள்ளியிருந்து பேசுவது, மாஸ் அணிவது என்று விழிப்பாக இருந்தனர். ஆனால் தற்போது மாஸ்க் அணிவதும் குறைந்துவிட்டது, சமூக இடைவெளியும் இல்லாமல் போய்விட்டது.

மற்றவர்கள் எப்படியோ நாம் மூன்று லேயர் மாஸ்க் அணிந்தால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை அளித்திருந்தனர். இந்த நிலையில் இருவரும் மாஸ்க் அணிந்திருந்தால் இருவருக்கும் இடையே ஆறு அடி இடைவெளி தேவையில்லை. மூன்று அடி இடைவெளி இருந்தாலே போதும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

க்ளீனிக்கல் இன்ஃபெக்‌ஷியஸ் டிசீஸ் என்ற மருத்துவ இதழில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆறு லட்சம் பேரிடம் 16 நாட்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மாஸ்க் அணிந்து மூன்று அடி மற்றும் ஆறு அடியில் இடைவெளி விட்டு மற்றவர்களுடன் பேச, பழக இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். 16 நாள் முடிவில் இரண்டு தரப்பினர் மத்தியிலும் கொரோனா விகிதம் ஒரே அளவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மாஸ்க் அணிந்து கொஞ்சம் நெருக்கமாக நின்று பேசினாலும் கூட அது கொரோனா தொற்றில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாம் நம்மை சுகாதாரமாக வைத்துக் கொள்வதால், ஆறு அடி என்ன மூன்று அடி தொலைவில் கூட நின்று மற்றவர்களுடன் உரையாட முடியும் என்பது தெரியவந்துள்ளது. இது படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் ஊர் மக்கள் மத்தியில் அந்த படித்த மாணவர்களைப் போன்ற விழிப்புணர்வு இருக்காது. இந்த மூன்று அடி இடைவெளி என்பது எந்த அளவுக்கு நம் ஊர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை என்கின்றனர் மருத்துவர்கள்!