தியேட்டர் உரிமையாளர்களின் திடீர் முடிவு!

 

தியேட்டர் உரிமையாளர்களின்  திடீர் முடிவு!

கொரோனா கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களில் படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் இன்று இரவு 10 மணி முதல், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆன முகக் கவசம் அணிவது, சோப்பு அல்லது சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவது போன்றவற்றை திரையரங்க நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் திரையரங்க உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துதிருந்தது.

தியேட்டர் உரிமையாளர்களின்  திடீர் முடிவு!

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை எதிரொலியாக தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் மூடலாமா?அல்லது தொடர்ந்து செயல்பாட்டில் வைத்துக்கொள்ளலாமா? என திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இன்று காலை 11 மணியளவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தின் முடிவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை தொடர்ந்து இயக்க நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர். திரையரங்குகளுக்கு என தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் தொடர்ந்து படத்தை கட்டுப்பாடுகளை பின்பற்றி திரையிட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர்களின்  திடீர் முடிவு!

முன்னதாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் தியேட்டர்கள் பல மாதங்கள் மூடப்பட்டு திரைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அத்துடன் பல படங்கள் தயாராகி வெளிவராமல் இருந்த நிலையில் ஓடிடி முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வெளியானது. எனவே இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே தியேட்டர் உரிமையாளர்கள் இவ்வாறு முடிவெடுத்துள்ளனர்.