கொரோனா நோயாளிகளை தேடிப்பிடித்து சிகிச்சை அளிக்கிறோம்! – விஜயபாஸ்கர் பெருமிதம்

 

கொரோனா நோயாளிகளை தேடிப்பிடித்து சிகிச்சை அளிக்கிறோம்! – விஜயபாஸ்கர் பெருமிதம்

தமிழகத்தில் யாருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் மக்கள் கொரோனாவைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளை தேடிப்பிடித்து சிகிச்சை அளிக்கிறோம்! – விஜயபாஸ்கர் பெருமிதம்புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள் கொரோனா சிறப்பு வார்டின் வசதிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

கொரோனா நோயாளிகளை தேடிப்பிடித்து சிகிச்சை அளிக்கிறோம்! – விஜயபாஸ்கர் பெருமிதம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “வல்லரசு நாடுகளே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. ஆனால், தமிழக அரசு எல்லா சவால்களையும் எதிர்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் நிலையை அடையவில்லை.

http://


தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வீரியமிக்க, விலை அதிகமான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்களைத் தேடிப்பிடித்து பரிசோதனை செய்து, கொரோனாவைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

கொரோனா நோயாளிகளை தேடிப்பிடித்து சிகிச்சை அளிக்கிறோம்! – விஜயபாஸ்கர் பெருமிதம்தமிழக அரசின் செயலை மத்திய அரசும், உலக சுகாதார நிறுவனமும் பாராட்டி வருகின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசும், மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். எனவே, மக்கள் கொரோனாவைக் கண்டு பயப்பட வேண்டாம்” என்றார்.