கொரோனாவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம்! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

 

கொரோனாவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம்! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசு இதுவரை ரூ.10 ஆயிரம் கோடியை செலவு செய்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம்! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்சென்னை கொடுங்கையூரில் கொரோனாத் தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அ.தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 500 ஏழைக் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கினார்.

கொரோனாவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம்! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனாத் தடுப்பு மற்றும் சிகிச்சை உள்ளிட்டவைக்காக கடந்த மூன்று மாதங்களில் ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதால் தற்போது கொரோனா நோய்த் தொற்று குறைய ஆரம்பித்துள்ளது.
தி.மு.க-வினர் தற்போது துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசின் கொரோனா பணிகள் தொடர்பாக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் மு.க.ஸ்டாலின் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்” என்றார்.