நாமே தீர்வு… இணையதளத்தை அறிமுகம் செய்த ஜி.வி.பிரகாஷ்! – நன்றி சொன்ன கமல்

 

நாமே தீர்வு… இணையதளத்தை அறிமுகம் செய்த ஜி.வி.பிரகாஷ்! – நன்றி சொன்ன கமல்

மக்கள் நீதி மய்யத்தின் நாமே தீர்வு இணையதளத்தை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதற்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைவோம் வா திட்டத்துக்கு எதிராக நாமே தீர்வு என்ற திட்டத்தை அறிவித்தது மக்கள் நீதி மய்யம். கொரோனா பாதிப்பு காரணமாக உதவி தேவைப்படும் மக்களுக்கும் உதவி செய்ய உள்ளவர்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்து செயல்பட நாமே தீர்வு உதவும் என்று கமல் அறிவித்திருந்தார்.

நாமே தீர்வு… இணையதளத்தை அறிமுகம் செய்த ஜி.வி.பிரகாஷ்! – நன்றி சொன்ன கமல்தற்போது இதற்கான இணையதளத்தை மக்கள் நீதி மய்யம் உருவாக்கியுள்ளது. இதில் உதவி செய்பவர்கள், உதவி பெறுபவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. உதவி செய்ய விரும்புகிறவர்கள் பணமாக, மருந்தாக, உணவுப் பொருளாக வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், உதவி பெறுபவர்கள் தங்கள் தேவை, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவிட வேண்டும் என்று மட்டும் உள்ளது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் இந்த தளம் உள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் என்ன தேவைப்படுகிறது என்று வெளிப்படையாக குறிப்பிடும்போது மட்டுமே உதவி செய்பவர்கள் நேரடியாக செய்ய முடியும்.

http://

அப்படி எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. மொத்தமாக மக்கள் நீதி மய்யத்துக்கு கொடுத்துவிட்டால், அவர்களாகவே பிரித்துக் கொடுக்கும் வேலையை செய்வார்கள் என்ற அளவிலேயே இணையதளம் உள்ளது.
இந்த புதிய இணையதளத்தை ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டம் மக்கள் உதவ, உதவி பெற உதவியாக இருக்கும். நம்முடைய நகரம் எதிர்பார்க்கும் தேவை இது. இந்த திட்டத்தில் இணைந்து பசுமையான, பாதுகாப்பான சென்னையை மீட்டெடுப்போம் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

http://


கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்வீடில், “naametheervu.org நாமே தீர்வு இயக்கத்தின் அடுத்த கட்டம். உதவ நினைப்போரையும், உதவி வேண்டுவோரையும் இணைத்திடும் முயற்சி. இந்த இணையதளத்தை இன்று அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்க்கு என் நன்றிகள். இளைஞர்கள் இணைந்தால் தான் தீர்வுகள் விரைவாகும். இணைந்து மீட்போம் சென்னையை” என்று கூறியுள்ளார்.