அச்சுறுத்த நினைத்தால் நடக்காது! – அ.தி.மு.க அரசுக்கு கனிமொழி கண்டனம்

 

அச்சுறுத்த நினைத்தால் நடக்காது! – அ.தி.மு.க அரசுக்கு கனிமொழி கண்டனம்

தி.மு.க-வை அச்சுறுத்தலாம் என்று அ.தி.மு.க அரசு நினைத்தால் நடக்காது என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை திடீரென்று கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு பேசிய விவகாரத்தை வைத்து அதிகாலை நேரத்தில் நங்கநல்லூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டுக்கு வந்த போலீசார் கைது செய்து கமிஷனர் அலுவலகம் அழைத்துச் சென்றனர்.

அச்சுறுத்த நினைத்தால் நடக்காது! – அ.தி.மு.க அரசுக்கு கனிமொழி கண்டனம்
அவரை நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தியபோது இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவர் விடுதலை செய்ய வேண்டிய நிலைக்கு அ.தி.மு.க அரசு ஆளானது.
இது குறித்து கருத்து தெரிவித்து தி.மு.க எம்.பி கனிமொழி வெளியிட்ட ட்வீடில், “திமுக அமைப்பு செயலாளர் அண்ணன் #RSBharathi கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் செய்த ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி, சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் காழ்ப்புணர்ச்சியோடு ஆர்.எஸ்.பாரதி அவர்களை அதிமுக அரசு கைதுசெய்த நிலையில்,


நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் திமுகவை அச்சுறுத்த அதிமுக அரசு நினைத்தால், அது நடக்காது” என்று கூறியுள்ளார்.