Home மாவட்டங்கள் ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

ஈரோடு

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் அணைக்கட்டு உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், பவானி ஆறு வழியாக காளிங்கராயன் அணைக்கட்டு வந்தடைகிறது. இங்கிருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது காளிங்கராயன் பாளையம், ஈரோடு, பள்ளிபாளையம், வெண்டிபாளையம், கருமாண்டம் பாளையம், பணப்பாளையம், கொடிமுடி வரை 56 மைல் தூரம் செல்கிறது. இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

இந்த நிலையில், நேற்று முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி, நடந்த நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி கலந்துகொண்டு மதகுகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, காலிங்கராயன் கால்வாயில் பொங்கும் நுரையுடன் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் விவசாயிகள் கரும்பு, வாழை,மஞ்சள், நெல் உள்ளிட்டவைகளை பயிர் செய்து பயனடைய முடியும் என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணி, பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்..திருமாவளவன் முழக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்11.8.1962ல் அங்கனூரில் பிறந்தவர். இவரது பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன. மேலும், பொன்விழா மாநாடும்...

இன்னும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வாங்கவில்லையா?… உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

கொரோனா நிவாரண நிதியை பெறாதவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை...

ஒலிம்பிக்ஸில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை நிகழ்த்திய மீரா பாய்… இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிப்பூர் முதல்வர்!

சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக ஒலிம்பிக்ஸ் பார்க்கப்படுகிறது. எந்தவொரு நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே அவர்களின் லட்சியமாக இருக்கும். வெள்ளிப் பதக்கத்தையாவது நிச்சயம் பெற்றுவிட...

கொரோனாவால் மென்பொறியாளர் பலி; மனைவியும் மகளும் 18வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த மின் பொறியாளர் ரவிராஜா, மனைவி சத்யாபாய் மற்றும் ஐந்து வயது மகளுடன் மலேசியா கோலாலம்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். கோலாலம்பூரில் தாமான்...
- Advertisment -
TopTamilNews