பாசனத்திற்காக வைகை அணையை திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்!

 

பாசனத்திற்காக வைகை அணையை திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியதால் பாசனத்திற்காக நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை, பவானிசாகர் அணை உள்ளிட்ட பிரதான அணைகளில் இருந்தும் கெளவரப்பள்ளி உள்ளிட்ட சிறிய நீர்நிலைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், பாசனத்துக்கு நீர் திறக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார்.

பாசனத்திற்காக வைகை அணையை திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்!

இந்த நிலையில், பாசனத்துக்காக துணை முதல்வர் ஓபிஎஸ் வைகை அணையை திறந்து வைத்தார். மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக 120 நாட்களுக்கு 6,739 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மற்றும் மதுரையில் 45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. வைகை அணையில் இருந்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் செல்லூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.