கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

 

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால், காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகளில் இருந்து நீர் திறக்கப்படும். அந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தற்போது காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 10,668 கன அடி நீரும், கபினியில் இருந்த 35,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருவதால், காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45,668 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் கனமழை தொடர்ந்தால், நீர் திறப்பின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.