காவிரியில் நீர் திறப்பு மிகப்பெரிய அளவில் குறைப்பு!

காவிரியில் நீர் திறப்பு மிகப்பெரிய அளவில் குறைப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி தண்ணீர் திறப்பது 30 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காவிரியில் நீர் திறப்பு மிகப்பெரிய அளவில் குறைப்பு!
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததைத் தொடர்ந்து கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடி தண்ணீர் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டது.

காவிரியில் நீர் திறப்பு மிகப்பெரிய அளவில் குறைப்பு!
இதைத் தொடர்ந்து மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. விரைவில் 100 அடியை மேட்டூர் அணை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது கர்நாடகாவில் மழை குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் அளவு மிகக் கடுமையாக சரிந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து 30,796 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வரும் தண்ணீரின் அளவு 60 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. இது இன்னும் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.