பேட்டிங்கிலும் அசத்திய பவுலர்கள் வாஷிங்டன் சுந்தர் – தாகூர்

 

பேட்டிங்கிலும் அசத்திய பவுலர்கள் வாஷிங்டன் சுந்தர் – தாகூர்

இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றன.

மூன்றாம் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி கிடைக்காமல் டிராவில் முடிவடைந்தது. தற்போது நான்காம் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் என தனது ஸ்கோர் நிர்ணயித்தது.

பேட்டிங்கிலும் அசத்திய பவுலர்கள் வாஷிங்டன் சுந்தர் – தாகூர்

தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தங்களின் சிறப்பான பந்துவீச்சால் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் அறிமுகமான ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

 அடுத்து ஆடிய இந்திய அணியில் ஓபனிங் வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கில் இறங்கினர். ரோஹித் சர்மா 44 ரன்கள் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா 25 ரகானே 37 மயங்க் அகர்வால் 38 ரிஷப் பந்த் 23 என்று பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர் சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் இந்த ஜோடி அருமையான பார்ட்னர்ஷிப் கொண்டுவந்தது. பவுலிங்கில் அசத்திய இந்த ஜோடி பேட்டிங்கிலும் கலக்கியது.

பேட்டிங்கிலும் அசத்திய பவுலர்கள் வாஷிங்டன் சுந்தர் – தாகூர்

வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களைச் சேர்த்தார். தாகூர் 67 ரன்களை விளாசினார் இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது. இறுதியாக 10 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 336 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியாவின் பவுலர் கோல்ட் 5 விக்கெட்டுகளை பறித்தார் இப்பொழுது ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 33 ரன்கள் அதிகம் உள்ளது.

பேட்டிங்கிலும் அசத்திய பவுலர்கள் வாஷிங்டன் சுந்தர் – தாகூர்

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு என்பது சாத்தியம் இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது. அனேகமாக மூன்றாம் போட்டியை போல இதுவும் டிராவில் முடியவே அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் சமமாக பங்கிட்டுக் கொள்ளும் படியான சூழல் அமையும் என்று பலரும் கணிக்கிறார்கள்.