சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்!

 

சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்!

இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் முதல் முறையாக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக சென்னை மாநகராட்சி அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் படியாக அவர் சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், இது நம்ம இன்னிங்ஸ் என்ற ஹேஷ்டாக் மூலம் சுந்தர் நியமனம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அதிரடி காட்டிய சென்னையை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பலரையும் கவர்ந்துள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்!

இளம் வீரரை தேர்தல் தூதராக நியமித்து இருப்பது இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் சென்னை முழுவதும் வாக்காளர்களை கவர நடத்தப்படும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்று வந்த வாஷிங்டன் சுந்தர் தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.