பாஜகவில் இணைந்து விட்டாரா கு. க. செல்வம்… பாஜகவின் வி.பி.துரைசாமி விளக்கம்!

பாஜகவில் இணைந்து விட்டாரா கு. க. செல்வம்… பாஜகவின் வி.பி.துரைசாமி விளக்கம்!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக தனக்கு பதவி தரப்படாதால் அவர் அதிருப்தியில் உள்ளதாகவும் அதனால் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி சென்ற கு.க செல்வம், டெல்லியில் ஜெ. பி. நட்டாவை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கு. க.செல்வம், தான் பாஜகவில் இணையவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாக தான் டெல்லிக்கு வந்தேன் என்று மழுப்பலாக கூறினார்.

பாஜகவில் இணைந்து விட்டாரா கு. க. செல்வம்… பாஜகவின் வி.பி.துரைசாமி விளக்கம்!

இதை தொடர்ந்து குக செல்வதை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி, கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்தை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதால் திமுகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து சென்னை திநகரில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு கு.க செல்வம் சென்றுள்ளார். அங்கு இருந்த ராமர் உருவப் படத்துக்கு மரியாதையும் செலுத்தியுள்ளார்.

பாஜகவில் இணைந்து விட்டாரா கு. க. செல்வம்… பாஜகவின் வி.பி.துரைசாமி விளக்கம்!

இந்நிலையில் இதுகுறித்து திமுகவில் இருந்து விலகி தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக உள்ள வி.பி.துரைசாமி கூறும் போது, “திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைய இல்லை” என்று தெரிவித்துள்ளார்.