மெரினாவில் கலைஞரின் நினைவிடத்திற்கு அனுமதி வழங்க உதவியது மோடி தான்- விபி துரைசாமி

 

மெரினாவில் கலைஞரின் நினைவிடத்திற்கு அனுமதி வழங்க உதவியது மோடி தான்- விபி துரைசாமி

சென்னை தண்டையார்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவுக்கு முன்னதாக சென்னை கூட்டுறவு வங்கியில் சேர்மனாக இருந்த வி.கிரிநாத் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். விழாவில், லட்சுமணன் என்ற விவசாயிக்கு டிராக்டர் இலவசமாக வழங்கப்பட்டது.

மெரினாவில் கலைஞரின் நினைவிடத்திற்கு அனுமதி வழங்க உதவியது மோடி தான்- விபி துரைசாமி

விழாவில் பேசிய பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி, “தேசம் என்ற கொள்கையை ஏற்பவர்தான் பாஜகவில் உறுப்பினராக இருக்க வேண்டும். பிற கட்சிகள் குடும்ப கட்சி, ஆனால் பாஜக அப்படி இல்லை. பாஜகவில், ஏழை ஒருவர் கூட பிரதமராக முடியும். பிறக்கட்சியில் யாருடைய வாரிசு, எவ்வளவு கோடி பணம் வைத்து இருக்கிறார் என்பதை பார்த்து தான் பிரதமராக்குவார்கள். பாஜகவினருக்கு மட்டும் தான் விவசாயிகளை மதிக்க, அவர்களை உயர்த்த வேண்டும் என்று எண்ணம் உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் 3 விவசாய சட்டங்களை வாபஸ் வாங்க சொல்கிறார். இந்தியாவிலேயே விவசாய சட்டத்தை முதன்முதலில் ஆதரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். அவரை சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி, விவசாய சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சொல்லி கடிதம் எழுத சொல்வது எந்தளவிற்கு பித்தலாட்டம் என்று பாருங்கள். ஆர்.எஸ் பாரதி இனி மனுதாரர் பாரதி என்று தான் அழைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் பெட்டிசன் போடுகிறார். சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்திற்கு அனுமதி வழங்க உதவியது மோடி தான். உண்மையான விவசாயிகள் வயல்வெளிக்கு போகாமல் இருக்க மாட்டார்கள் ஆனால், டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக போராடி வருபவர்கள் உண்மையான விவசாயிகளா? டெல்லியில் போரட்டம் நடத்துபவர்கள் விவசாயியா? அவர்கள் சரத்பவர் , பிரகாஷ் சிங் பாதால் ஆட்கள். மண்டி ஏஜெண்ட்கள் தான் ” எனக் கூறினார்.