‘உதயசூரியனுக்கு பதில் மாம்பழம் சின்னத்தில் வாக்கு’ முதியவரை ஏமாற்றிய இளைஞருக்கு வலைவீச்சு!

‘உதயசூரியனுக்கு பதில் மாம்பழம் சின்னத்தில் வாக்கு’ முதியவரை ஏமாற்றிய இளைஞருக்கு வலைவீச்சு!

உதயசூரியனுக்கு பதில் மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

‘உதயசூரியனுக்கு பதில் மாம்பழம் சின்னத்தில் வாக்கு’ முதியவரை ஏமாற்றிய இளைஞருக்கு வலைவீச்சு!

கடந்த 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் இரவு 7 மணி வரை நீடித்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 75 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில் பதிவான 16 தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் 3 மையங்களில் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறல்கள், தேர்தல் புகார்கள் என பல்வேறு அவர் மீது கட்சி பாகுபாடு இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

‘உதயசூரியனுக்கு பதில் மாம்பழம் சின்னத்தில் வாக்கு’ முதியவரை ஏமாற்றிய இளைஞருக்கு வலைவீச்சு!

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவரை ஏமாற்றி உதயசூரியன் சின்னத்திற்கு பதில் மாம்பழம் சின்னத்தில் இளைஞரொருவர் வாக்கு செலுத்த வைத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்.

‘உதயசூரியனுக்கு பதில் மாம்பழம் சின்னத்தில் வாக்கு’ முதியவரை ஏமாற்றிய இளைஞருக்கு வலைவீச்சு!

இந்தப் புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், நாயகன்பிரியாள் பகுதியை சேர்ந்த தப்பு சாமி என்ற முதியவர் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாததால் மணிகண்டன் என்ற இளைஞரை உதவிக்கு நாடியுள்ளார். மணிகண்டன் உதவியுடன் வாக்கு சாவடிக்கு வந்த தப்புசாமி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க உதவுமாறு கூறியுள்ளார். ஆனால் மணிகண்டன் முதியவரின் அறியாமையை அறிந்து உதயசூரியனுக்கு பதிலாக மாம்பழம் சின்னத்தில் முதியவரின்கை விரலை பிடித்து வாக்களித்துள்ளார். இதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவிட்டுள்ளார். எனவே புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இளைஞர் மணிகண்டனை திவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.