அதிமுக தலைமை அலுவலகத்தில் குவியும் தொண்டர்கள்… காவல்துறை பலத்த பாதுகாப்பு!

 

அதிமுக தலைமை அலுவலகத்தில் குவியும் தொண்டர்கள்… காவல்துறை பலத்த பாதுகாப்பு!

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து அதிமுக தலைமையகத்தில் கட்சி தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் குவியும் தொண்டர்கள்… காவல்துறை பலத்த பாதுகாப்பு!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைக்கும் என தொண்டர்கள் கருதுகின்றனர். இதனால் ஏராளமான தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கட்சி தலைமையகத்தின் நுழைவுவாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டு , தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முதல்வர், துணை முதல்வர் இருவரையும் வரவேற்கும் வண்ணம் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்டம், பாட்டம் என அதிமுக தலைமை கழகம் களைகட்டத் தொடங்கியுள்ளது.