அதிகரிக்கும் சீன பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்பு குரல்…. ஆனால் அது அவ்வளவு எளிது இல்லை…

 

அதிகரிக்கும் சீன பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்பு குரல்…. ஆனால் அது அவ்வளவு எளிது இல்லை…

நம் நாட்டில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற உணர்வு நம் மக்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் எல்லையில் சீன வீரர்களின் அத்துமீறலை தடுக்க அவர்களுடன் மோதலில் ஈடுபட்டு இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இது தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான மனநிலை வலுவாக அதிகரித்துள்ளது. சீன பொருட்களை பாய்காட் செய்ய வேண்டும் என குரல் அதிகரிக்க தொடங்கியது.

அதிகரிக்கும் சீன பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்பு குரல்…. ஆனால் அது அவ்வளவு எளிது இல்லை…

இந்நிலையில்,நுகர்பொருள், நுகர்வோர் சாதனங்கள், பொம்மைகள் உள்பட 500 சீன பொருட்களை வாங்க கூடாது என ஒரு பட்டியலை அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) வெளியிட்டது. அந்த அமைப்பின் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், சீன பொருட்களை புறக்கணிப்பதால் வர்த்தகத்தில் இழப்பு ஏற்படும் இருப்பினும் சீன ஆதிக்கத்தை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கும்படி அரசை வலியுறுத்தியுள்ளோம். மேலும் 2021 டிசம்பருக்குள் சீன இறக்குமதியை ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு குறைக்கும் நோக்கில், கடந்த 10ம் தேதி முதல் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எங்களது நாடு தழுவிய செயல்பாட்டை முடுக்கி விட்டுள்ளோம் என தெரிவித்தார்.

அதிகரிக்கும் சீன பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்பு குரல்…. ஆனால் அது அவ்வளவு எளிது இல்லை…

சீன பொருட்களை தயாரிக்க அதிநவீன தொழில்நுட்பம் தேவை இல்லை. இந்தியாவும் நல்ல வசதிகளை கொண்டுள்ளது இதனால் அந்த பொருட்களை நம் நாட்டில் தயாரிக்கலாம் என்று வர்த்தக அமைப்பு வலியுறுத்துகிறது. அதேசமயம் பொருளாதார நிபுணர்களின் கருத்து வேறுவிதமாக உள்ளது. பொருளாதார படிப்புகள் மற்றும் திட்டமிடுதலுக்கான ஜே.என்.யூ. மையத்தின் பேராசிரியர் பிஸ்வாஜித் கூறுகையில், சில துறைகளில் நாம் சீனாவை சார்ந்து உள்ளோம். அவற்றுக்கு மாற்று ஆதாரங்கள் வேறு எங்கும் கிடையாது என தெரிவித்தார். ஆக, சீன பொருட்களை புறக்கணிப்பது அல்லது இறக்குமதியை நிறுத்துவது நமக்கு அவ்வளவு எளிதல்ல என்பதுதான் தற்போதைய சூழல்.