“கொடநாட்டில் அக்கா குழந்தையாக மாறிவிடுவார்” சசிகலா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

 

“கொடநாட்டில் அக்கா குழந்தையாக மாறிவிடுவார்”  சசிகலா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு தேர்தலை சந்தித்த ஜெயலலிதா, எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தில் நிகழ்த்தப்பட்ட அவமானம் குறித்து சசிகலா முதல்முறையாக மனம் திறந்துள்ளார். பிரபல தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மார்ச் 25, 1989 ல் சட்டமன்றத்தில் ஜெயலலிதா மீதான தாக்குதல் சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணமாக மாறிவிட்டது. காரசாரமான விவாதங்கள் கேள்விகள் பதில்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் என்றும் பாராமல் புடவையைப் பிடித்து இழுத்த சம்பவங்கள் சட்டசபையில் இருந்து வெளியேறும் போது அவர் மனதில் நினைத்தது, பிறகு சொன்னது என்னவென்றால், மீண்டும் அந்த சட்டசபைக்குள் நுழைந்தால் ஒரு முதலமைச்சராக தான் வருவேன் என்று சொன்னார்.

“கொடநாட்டில் அக்கா குழந்தையாக மாறிவிடுவார்”  சசிகலா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

இரண்டாகப் பிளவு பட்டிருந்த அதிமுக எப்படி இணைந்தது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சசிகலா, இந்த விவகாரத்தில் என் கணவரின் தவறான ஏவியேசன் கிருஷ்ணமூர்த்தி இணைப்புக்கு முக்கிய பங்காற்றினார் . ஜானகி அணி உடன் ஒரு சந்திப்பு நடந்தது. அதில் நான் கலந்து கொண்டேன். ஜானகி அம்மா என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அவரை சந்திக்கட்டுமா? என்று அக்காவிடம் கேட்டேன். அவர் முதலில் சம்மதிக்கவில்லை. பிறகு உன் இஷ்டம் என்றார். நான் அங்கு சென்று அவருடன் பேசினேன். என் கணவர் தொடங்கிய இந்த இயக்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அதை பிரித்து விட்டேன் என்ற பெயர் எனக்கு வந்துவிட வேண்டாம். நான் அரசியலுக்கு விருப்பப்பட்டு வரவில்லை. அந்தப் பெண் பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளார். அவரை கொண்டு இயக்கத்தை நல்லபடியாக நடத்துங்கள். என் கணவரின் பெயரை காப்பாற்றுங்கள். அதுதான் என் விருப்பம் என்று சொன்னார்.அதன் பிறகுதான் அவர் அரசியலிலிருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.

“கொடநாட்டில் அக்கா குழந்தையாக மாறிவிடுவார்”  சசிகலா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தொடர்ந்து பேசிய சசிகலா , “கொடநாடு எஸ்டேட் செல்லும்போதெல்லாம் மிகவும் சுதந்திரமாக உணர்வோம். கொடநாட்டில் அக்கா குழந்தை போல மாறி விடுவார். அவர் வேறு ஒரு ஜெயலலிதா என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு சுதந்திரமாக இருப்பார் என்று கூறியதுடன் அக்கா வீட்டில் இருக்கும் போது கேரம் போர்டு அடைவோம். மிமிக்ரி செய்து காட்டுவார். பாட்டெல்லாம் பாடுவார். கொடநாட்டில் பல சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவுக்கு கருப்பு வெள்ளை படங்கள் அதிகம் பிடிக்கும். எம்ஜிஆர் நடித்த கத்தி, சண்டைகள் கொண்ட படங்களை அதிகம் பார்ப்பார். காலையில் குளிக்கும் போது தான் விரும்பிய பாடல்களை அதிக சத்தம் வைத்து கேட்பார். பண்டிகைகளில் அவருக்கு நாட்டம் இல்லை. நான் எங்கு செல்லும் வரை தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை கொண்டாட வில்லை. நான் சென்ற பிறகுதான் பண்டிகைகளை கொண்டாட ஆரம்பித்தார். பட்டாசு வெடிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. அவர் இஷ்ட தெய்வம் அனுமன்; அவர் தான் வலிமை தருகிறார் என்பார்” என்றார்.

“கொடநாட்டில் அக்கா குழந்தையாக மாறிவிடுவார்”  சசிகலா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

இறுதியாக போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேறியது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பது எனக்கு 4 மாதத்துக்கு முன்பே தெரியும். என்னையும் அக்காவையும் பிரிக்க பெரிய சதி நடந்து கொண்டிருந்தது. அதை யார் செய்கிறார்கள், யாரெல்லாம் இதில் ஈடுபட்ட கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க நானும் அக்காவும் சேர்ந்து தான் அந்த நாடகத்தை நடத்தினோம். உங்களுக்கு சொல்பவர்களை கேட்டு என்னை வெளியே அனுப்பிவிடுங்கள்; நானும் வெளியில் சென்று விடுகிறேன் என்றேன். நான் வெளியேறிய 2ஆம் நாள் எனக்கு அக்கா செல்போன் வாங்கி கொடுத்தார். அவரும் புதிய எண் கொண்ட செல்போனில் என்னிடம் பேசி வந்தார்” என்றார்.