எப்படி இருக்கிறார் சசிகலா? : ஹெல்த் ரிப்போர்ட்!

 

எப்படி இருக்கிறார் சசிகலா? : ஹெல்த் ரிப்போர்ட்!

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் உள்ள சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் விடுதலைக்கு முன்பாகவே சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் கடந்த 19 ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எப்படி இருக்கிறார் சசிகலா? : ஹெல்த் ரிப்போர்ட்!

இந்நிலையில் சசிகலா உடல்நிலை குறித்து பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக உள்ளது ; கடந்த 4 நாட்களாக, செயற்கை சுவாசம் இன்றி, இயல்பாக சுவாசிக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி இருக்கிறார் சசிகலா? : ஹெல்த் ரிப்போர்ட்!

அதேபோல் சசிகலா எப்போது டிஸ்சார்ஜ் என்பது குறித்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை இன்று முடிவெடுக்கிறது. சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து முடிவுகள் வந்த பின் டிஸ்சார்ஜ் பற்று முடிவெடுக்கப்படுகிறது. அறிகுறிகள் இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதால் அவர் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.