இந்த சிவ சேனா அப்பம் உள்ள சிவ சேனா இல்லை.. உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு இல்லை.. விஷ்வ இந்து பரிஷத்

இந்த சிவ சேனா அப்பம் உள்ள சிவ சேனா இல்லை.. உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு இல்லை.. விஷ்வ இந்து பரிஷத்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு கிடையாது என விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது: ராமர் கோயில் பூமி பூஜைக்கு எந்தவொரு மாநில முதல்வர்களும் அழைக்கப்படவில்லை.

இந்த சிவ சேனா அப்பம் உள்ள சிவ சேனா இல்லை.. உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு இல்லை.. விஷ்வ இந்து பரிஷத்

நெறிமுறைப்படி பூமி பூஜைக்காக உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மட்டுமே அயோத்தியில் இருப்பார். இந்த சிவ சேனா ராமர் கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய சிவ சேனா அல்ல, புகழ்பெற்ற பாலாசாகேப் தாக்கரேவால் வளர்க்கப்பட்டது அல்ல. சிவ சேனாவின் தலைவராக இருந்தாலும் உத்தவ் தாக்கரே ராமர் கோயில் பூமி பூஜைக்கு அழைக்கப்படமாட்டார். ஒரு காலத்தில் இந்துத்துவாக கட்சியாக இருந்த சிவ சேனா போன்ற கட்சி வீழ்ச்சி கண்டு வருத்தப்படுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சிவ சேனா அப்பம் உள்ள சிவ சேனா இல்லை.. உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு இல்லை.. விஷ்வ இந்து பரிஷத்

முன்னதாக உத்தவ் தாக்கரே, ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடத்தலாம். மகிழ்ச்சியான இந்த நிகழ்வு மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இந்த விழாவில் ஆர்வமாக இருப்பார்கள். நாம் கொரோனா வைரஸ் பரவுவதை அனுமதிப்பமோ? என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமையன்று, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அதிகாரத்துக்காக இந்துத்துவா கொள்கையை விட்டு விட்டார் என பா.ஜ.க. குற்றம் சாட்டி இருந்தது. தற்போது சிவ சேனாவுக்கு ராமர் கோயில் விழாவுக்கு அழைப்பு கிடையாது என விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.