அப்பா ஆகப்போகும் கோலி… ட்வீட் மூலம் அறிவித்த அனுஷ்கா ஷர்மா!

 

அப்பா ஆகப்போகும் கோலி… ட்வீட் மூலம் அறிவித்த அனுஷ்கா ஷர்மா!


ஜனவரியில் தங்களுக்குக் குழந்தை பிறக்கப் போவதாக அனுஷ்கா ஷர்மா ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

அப்பா ஆகப்போகும் கோலி… ட்வீட் மூலம் அறிவித்த அனுஷ்கா ஷர்மா!


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, திரைப்பட நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஷாரூக்கானுடன் சீரோ படத்தில் நடித்தற்கு பிறகு அனுஷ்கா ஷர்மா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இதனால், கோலி – அனுஷ்கா தம்பதியினரிடம் எப்போது குழந்தை என்று பலரும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.


தற்போது, வருகிற ஜனவரி மாதம் குழந்தை பிறக்கப் போவதாக அனுஷ்கா – கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கோலிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அப்பா ஆகப்போகும் கோலி… ட்வீட் மூலம் அறிவித்த அனுஷ்கா ஷர்மா!


இந்த மாதத்தின் தொடக்கத்தில் கரீனா கபூர் – சயிஃப் அலிகான் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது அனுஷ்கா ஷர்மா தன்னுடைய முதல் குழந்தை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.