’விராட் கோலி விக்கெட் எனக்குத்தான்’ சொல்லும் ஆஸ்திரேலியா வீரர் யார்?

 

’விராட் கோலி விக்கெட் எனக்குத்தான்’ சொல்லும் ஆஸ்திரேலியா வீரர் யார்?

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோற்றதால் ஆஸ்திரேலியா தொடரை வென்றது.

இதே ஃபார்மலாவை டி20 தொடரில் செய்தது இந்திய அணி. ஆமாம். முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று தொடரையும் கைப்பற்றியது. தமிழகத்தின் நடராஜன் தங்கராசு உலகம் முழுவதும் தன் பெயரை ஒலிக்கும்படி பந்து வீச்சில் அசத்தினார்.

’விராட் கோலி விக்கெட் எனக்குத்தான்’ சொல்லும் ஆஸ்திரேலியா வீரர் யார்?

டி20  தொடர் நாயகன் விருது பெற்ற ஹிர்திக் பாண்டியா, ‘இந்தத் தொடரின் நாயகன் நடராஜன் தான்’ என்று கூறி கோப்பையை நடராஜனின் கையில் திணித்தார். வெட்கப்பட்டுக்கொண்டே அதை வாங்கி போட்டோ எடுத்துக்கொண்டார். வெற்றியின் கணத்தைத் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இயல்புடன் இருந்தார் நடராஜன்.

அடுத்ததாக, ஆஸ்திரேலியாவுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் ஆடவிருக்கிறது இந்திய அணி. அவற்றில் முதல் போட்டியில் மட்டுமே கேப்டன் விராட் கோலி ஆட விருக்கிறார். அதன்பின், மனைவி பிரசவத்திற்கு உடன் இருக்க இந்தியா திரும்பி விடுகிறார். இந்நிலையில் விராட் கோலி விக்கெட் எனக்கே என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய பவுலர் ஒருவர்.

’விராட் கோலி விக்கெட் எனக்குத்தான்’ சொல்லும் ஆஸ்திரேலியா வீரர் யார்?

ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய பவுலர் ஹேசில்வுட். ஆட்டத்தின் மிக முக்கியமான தருணங்களில் ஆட்டத்தின் முடிவையே மாற்றும் விதத்தில் பிரதான வீரர்களின் விக்கெட்டுகளைச் சாய்ப்பதில் வல்லவர்.

’விராட் கோலி விக்கெட் எனக்குத்தான்’ சொல்லும் ஆஸ்திரேலியா வீரர் யார்?

”இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகலில் பலமுறை வீழ்த்தியிருக்கிறேன். டெஸ்ட் போட்டியிலும் அது தொடரும். விராட் கோலி விக்கெட் எனக்கே” என்று கூறியுள்ளார்.

ஹேசில்வுட்டின் ஆசை நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.