கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறாரா விராட் கோலி? டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா கேப்டன்?

 

கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறாரா விராட் கோலி? டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா கேப்டன்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. 32 வயதான கோலி, இந்தியாவின் டெஸ்ட்,ஒரு நாள் போட்டி மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறாரா விராட் கோலி? டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா கேப்டன்?

இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 வடிவ கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் என பிசிசிஐ-யின் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்க்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”விராட் கோலி அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார். விராட் கோலி தாமாக முன்வந்து இந்த விலகல் முடிவு எடுத்துள்ளதாகவும்,கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் கூறினார். இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும் கோலி இல்லாத சமயத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா இந்திய அணியை வெற்றி பெறவும் வைத்துள்ளார். மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே தற்போது சிறந்த நட்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செய்தி இன்று காலை முதல் ட்விட்டரில் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இந்நிலையில் பிசிசிஐ-யின் பொருளாளரான அருண் துமால் இத்தகைய செய்திகளை நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது எல்லாம் குப்பை போன்ற செய்தி. து போன்ற எதுவும் நடக்கவில்லை.இதைத்தான் ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகிறது. பிசிசிஐ இந்த விவகாரத்தில் எதையும் விவாதிக்கவில்லை. விராட் கோலியே கேப்டனாக தொடர்வார்” என தெளிவுப்படுத்தியுள்ளார்.