சிவனையே எதிர்த்த சிவனடியார்… சிவபக்தியில் விஞ்சிய விறன்மிண்ட நாயனார்!

 

சிவனையே எதிர்த்த சிவனடியார்… சிவபக்தியில் விஞ்சிய விறன்மிண்ட நாயனார்!

பெரிது! பெரிது! புவனம் பெரிது!
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகனோ கரியமால் வந்தியில் வந்தோன்!
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்!
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்!
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்!
கலசமோ புவியிற் சிறு மண்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப்பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! என்பது ஔவையார் வாக்கு .

சிவனையே எதிர்த்த சிவனடியார்… சிவபக்தியில் விஞ்சிய விறன்மிண்ட நாயனார்!

சிவனை வணங்கும் சிவனடியார்களில் ஒருவர் சிவனை புறக்கணிப்பதாக அறிவித்து புரட்சி செய்தார் . அவரால்தான் நமக்கு ‘ திருத்தொண்டர் தொகை ‘ கிடைக்கப்பெறவும் அதன் மூலம் திருத்தொண்டர் அந்தாதியும் திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் ஆகியன கிடைக்கத்தது. அதற்கு காரணமாக இருந்தவர் தான் சிவனுகும் புறகு என்ற விறன்மிண்ட நாயனார். அவர் ஏன் சிவனுக்கு எதிரான பேசினார். அதனால் விளைந்தது என்ன ?

சேரநாட்டு செங்குன்றூர் என்ற ஊரில் பிறந்த விறன்மிண்ட நாயனார் சிவபிரானின் திருவடிகளில் பற்று கொள்வதைத் தவிர வேறு எந்தவிதப் பற்றுகளையும் பற்றுவதில்லை என வாழ்ந்தார். விறன்மிண்ட நாயனார் சிவனடியார்களின் மீது அதீத அன்பு கொண்டு மதித்து போற்றியவர்.

சிவனையே எதிர்த்த சிவனடியார்… சிவபக்தியில் விஞ்சிய விறன்மிண்ட நாயனார்!

சிவபெருமான் எங்கெல்லாம் எழுந்தருளி அருள் செய்து வீற்றிருக்கின்றோ அந்த தலங்கள் தோறும் யாத்திரை செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் . சிவனடியார்களிடம் மிகுந்த அன்பு கொண்ட காரணத்தால் செல்லும் தலங்களில் எல்லாம் முதலில் அங்குள்ள அடியார்களை வணங்கிய பிறகே ஆலயம் சென்று சிவனை வணங்குவார்.

பலதலங்களையும் வணங்கி வழிபட்டு கொண்டு தலயாத்திரையாக திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கே சிலகாலம் தங்கி தியாகராஜப் பெருமானை நாள் தோறும் வணங்கிவந்தார். ஆலய முன் பகுதியில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்து சிவனடியார்களுடன் அளவளாவி கொண்டு இருப்பார்.

சிவனையே எதிர்த்த சிவனடியார்… சிவபக்தியில் விஞ்சிய விறன்மிண்ட நாயனார்!

அப்படியான ஒருநாளில் சுந்தர மூர்த்தி நாயனார் தியாகேசனை தரிசிக்க ஆலயம் வந்தார். வந்தவர் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களான தொண்டர் குழாமை மதித்து வணக்கங்காமல் ஒதுங்கி சென்றார். அதனை கண்ட விறன்மிண்ட நாயனார் ” அடியார்களை வணங்காமல் செல்லும் சுந்தரன் இவ்வடியார்களின் திருக்கூட்டத்திற்கு புறம்பு. அவரை தடுத்தாட்கொண்ட சிவபெருமானுக்கும் புறம்பு என்று அறிவித்தார். அதாவது சுந்தரமூர்த்தி நாயனாரையும் அவரை தடுத்தாட் கொண்ட சிவபெருமானையும் புறக்கணிப்போம் என்றார் விறன்மிண்டர்.

 

சிவனையே எதிர்த்த சிவனடியார்… சிவபக்தியில் விஞ்சிய விறன்மிண்ட நாயனார்!

அதைக்கேட்ட திகைத்து நின்ற சுந்தரர் சிவனடியார்களிடம் விறன்மிண்ட நாயனார் கொண்டுள்ள அன்புறுதியைக் கண்டு வியந்தார். உடனே அங்கேயே அவர் ‘ தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்! ‘ எனத்தொடங்கும் திருத்தொண்டர் தொகை என்னும் திருப்பதிகத்தைப் பாடியருளிய சுந்தரர் சிவனடியார் திருக்கூட்டத்தைத் தொழுது 63 நாயன்மார்கள் பெயரையும் குறிப்பட்டு வணங்கினார். அதைக்கண்டு மகிழ்ந்த விறன்மிண்டர் ‘ இனி ஆரூரன் சுந்தரமூர்த்தியும் தியாகேசனும் அடியார் கூட்டத்தில் உள்ளவர்களாவர்’ என்று கூறினார்.

 

இவ்வாறாக சிவனடியார்களான திருத்தொண்டர்களின் பெருமையை நிலைநாட்டிய விறன்மிண்ட நாயனார் இவ்வுலகில் சைவ நெறி போற்றப்பட பெருந்தொண்டுகள் பல புரிந்தார். சிவபெருமான் மகிழ்ந்து , தம் கணங்களுக்குத் தலைமையாய் இருக்கும் கணநாயகர் பதவியை விறன்மிண்ட நாயனாருக்கு வழங்கியருளினார் .

சிவனையே எதிர்த்த சிவனடியார்… சிவபக்தியில் விஞ்சிய விறன்மிண்ட நாயனார்!

உலகம் உய்ய, நாம் உய்ய, சைவ நன்னேறியின் சீலம் உய்யத் திருத்தொண்டர் தொகையை வன்றொண்டர் நம்பியாரூரன் சுந்தர மூர்த்தி நாயனாரின் மூலம் பாடுவித்த பெருமை மிகு விறன்மிண்ட நாயனார் திருத்தாள் வணங்குவோம்.

திருவாரூர் செல்லும் வாய்ப்பு அமையுமானால் தியாகராஜ சுவாமி கோயில் கட்டை கோபுரம் எனப்படும் உட்கோபுரம் முன் இருக்கும் தேவாசிரிய மண்டபம் நோக்கி வணங்கிச் செல்லுங்கள் அங்கே விறன்மிண்ட நாயனாரும் சிவனடியார்களும் அமர்ந்து இருப்பதாக மனசீகமாக நினைத்து வணங்குங்கள் . அது அடியார்கள் அன்பையும் தியாகேசர் அருளையும் பெற ஏதுவாகும் .

சிவனையே எதிர்த்த சிவனடியார்… சிவபக்தியில் விஞ்சிய விறன்மிண்ட நாயனார்!

தியாகராஜ சுவாமி கோயிலில் கிழக்கு ராஜ கோபுரம் தாண்டியதும் வலது புறத்தில் இருக்கிறது தேவாசிரிய மண்டபம் . அதையும் தாண்டினால் ஒரு கட்டை கோபுரம் உண்டு அதன் இடது புறம் இருக்கிறது விறன்மிண்ட நாயனாரின் கம்பீரமான சிலை . திருவாரூர் செல்லும் போது தரிசித்து விட்டு வாருங்கள் .

நமசிவாய வாழ்க.

-மு.ரா.சுந்தரமூர்த்தி