“பழனிசாமி தாத்தா” மழலை வரை பிரபலமான எடப்பாடியார் : வைரல் வீடியோ!

 

“பழனிசாமி  தாத்தா”  மழலை வரை பிரபலமான எடப்பாடியார்  : வைரல் வீடியோ!

முதல்வர் பழனிசாமியின் பெயரை ஒரு குழந்தை அழுத்தம் திருத்தமாக கூறும் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

“பழனிசாமி  தாத்தா”  மழலை வரை பிரபலமான எடப்பாடியார்  : வைரல் வீடியோ!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி அசத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி. ஓட்டுக்காக இந்த பணத்தை கொடுக்கிறார் என்ற திமுகவின் விமர்சனத்தை தவிடு பொடியாக்கி, பொங்கல் பரிசு மக்களிடம் சென்றடையச் செய்திருக்கிறார். இதனால், தமிழகம் முழுவதுமே முதல்வரை பற்றிய பேச்சாக இருக்கிறது. இந்த நிலையில், ஒரு குழந்தையின் மனதிலும் கூட ஆணித் தரமாக முதல்வர் பழனிசாமியின் பெயர் பதிந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“பழனிசாமி  தாத்தா”  மழலை வரை பிரபலமான எடப்பாடியார்  : வைரல் வீடியோ!

அந்த வீடியோவில், ‘குழந்தை ஒன்று கரும்புத் துண்டை உரித்துக் கொண்டிருக்கிறது. இதனை யார் கொடுத்தா? என்ற அந்த குழந்தையின் அம்மா கேட்க, “பழனிசாமி தாத்தா கொடுத்தார்” என குழந்தை தெள்ளத் தெளிவாக கூறுகிறது. அம்மா மீண்டும் அதனை கேட்க, கடுப்பான குழந்தை, “பழனிசாமி தாத்தா தான் கொடுத்தார்” என்று குரலை சற்று உயர்த்திச் சொல்கிறது’. தமிழக மக்களுக்காக முதல்வர் அறிவித்திருக்கும் உதவித் திட்டங்கள், இந்த சந்ததி மட்டும் அல்ல.. இனி வரும் சந்ததியும் அவரது பெயரைச் சொல்லும் அளவிற்கு அவரது புகழ் உயர்த்தியிருக்கிறது என்பதையே இந்த வீடியோ பறைசாற்றுகிறது.

“பழனிசாமி  தாத்தா”  மழலை வரை பிரபலமான எடப்பாடியார்  : வைரல் வீடியோ!

இது குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், “ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதத்திலோ ஆட்சி கவிழ்ந்து விடும் என எதிர்க்கட்சி கூறியதற்கு பதிலடி இது. அசைக்க முடியாத சக்தியாக முதல்வர் பழனிசாமி மாறியிருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அவரது எளிமையான அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டுள்ளனர். முதல்வர் அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றடைவதால், முதல்வரை தமிழக மக்கள் அவர்களது குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கின்றனர். சினிமா பின்னணி ஏதும் இல்லாமல், குடும்பத்தினரை கட்சிக்குள் இழுக்காமல் திறம்பட ஆட்சி நடத்துபவர் எடப்பாடி தான்” என்று புகழ்ந்திருக்கிறார்.