‘சிறுமி பந்து விளையாடுவதை வியந்து பார்க்கும் 3 பூனைகள்’ இணையதளத்தை கலக்கும் க்யூட் வீடியோ!

 

‘சிறுமி பந்து விளையாடுவதை வியந்து பார்க்கும் 3 பூனைகள்’ இணையதளத்தை கலக்கும் க்யூட் வீடியோ!

ஒரு சிறுமி பந்து விளையாடுவதை பூனைகள் வியந்து பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சோஷியல் மீடியாக்களின் புழக்கம் தற்போது அதிகரித்து வருவதால், புது புது வீடியோக்கள் தினமும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக, விலங்குகள் செய்யும் குறும்புத் தனமான வீடியோக்கள் பல வைரல் ஆகி வருகின்றன. தனது ஓனருடன் நடனம் ஆடும் நாய், துணி துவைக்கும் குரங்கு, கையசைத்து உணவு கேட்கும் மனித குரங்கு போன்ற பல வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி, நெட்டிசன்களை கவர வைக்கின்றன. அந்த வகையில், ஒரு சிறுமி பந்து விளையாடுவதை ஆச்சர்யத்துடன் பூனைகள் பார்க்கும் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

‘சிறுமி பந்து விளையாடுவதை வியந்து பார்க்கும் 3 பூனைகள்’ இணையதளத்தை கலக்கும் க்யூட் வீடியோ!

அந்த வீடியோவில், ‘ஒரு சிறுமி பந்தை எதிர்பக்கம் நிற்பவரிடம் தூக்கி போடும் போது அதனை ஜன்னலில் அமர்ந்து கொண்டு 3 பூனைகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றன. அந்த பந்து மீண்டும் அந்த பெண்ணிடம் வருவதை அந்த பக்கமும் இந்த பக்கமும் பார்த்து வியக்கின்றன. பந்து மேலே போகும் போது 3 பூனைகளும் ஒன்றாக மேலே பார்க்கின்றன’.

‘சிறுமி பந்து விளையாடுவதை வியந்து பார்க்கும் 3 பூனைகள்’ இணையதளத்தை கலக்கும் க்யூட் வீடியோ!

இந்த வீடியோ தற்போது 10 லட்சம் வியூஸ்-ஐ கடந்து நெட்டிசன்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் ஏதோ ஒரு சிக்கலில் அனைவரும் இருக்கும் நிலையில், பூனைகளின் இந்த கியூட் ரியாக்ஷன் புத்துணர்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.