மருத்துவர்கள் பயன்படுத்திய பிபிஇ உடையை இழுத்துச் செல்லும் நாய்; அதிர்ச்சியூட்டும் புகைப்படம்!

மருத்துவர்கள் பயன்படுத்திய பிபிஇ உடையை இழுத்துச் செல்லும் நாய்; அதிர்ச்சியூட்டும் புகைப்படம்!

கோவை மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதிலிருந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவை,திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், கொடிசியா வணிக வளாகத்தில் உள்ள டி ஹால் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பயன்படுத்திய பிபிஇ உடையை இழுத்துச் செல்லும் நாய்; அதிர்ச்சியூட்டும் புகைப்படம்!

அங்கு முதலில் 200 நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 200 பேருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவர்கள் ஆடையை நாய் ஒன்று இழுத்துச் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. இந்த ஆடையின் மூலம் மற்ற நாய்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மருத்துவர்கள் பயன்படுத்திய பிபிஇ உடையை இழுத்துச் செல்லும் நாய்; அதிர்ச்சியூட்டும் புகைப்படம்!

இது குறித்துப் பேசிய சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் உடையைத் தூக்கி எறிந்ததாகவும் அவர் அலட்சியமாகச் செயல்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.