’35 ஆண்டுகள் பழமை வாய்ந்த’ ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

’35 ஆண்டுகள் பழமை வாய்ந்த’ ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

தமிழ்நாட்டில் உலக புகழ்மிக்க ஐம்பொன்னால் ஆன சிலைகள் பல கோவிலில் உள்ளது. பல வெளிநாட்டவர்கள் பார்த்து வியக்கும் அத்தகைய சிலைகள் கடந்த சில ஆண்டுகளாகத் திருடப்பட்டு வெளிநாட்டில் விற்கப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் பல்வேறு தமிழக கோவில்கள் சிலையை வெளிநாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார். இருப்பினும் சிலைகள் திருட்டு போவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், திருத்தணி மாநகராட்சியில் உள்ள ராமர் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு போக்கியுள்ளது.

’35 ஆண்டுகள் பழமை வாய்ந்த’ ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

திருத்தணி மாநகராட்சியில் உள்ள பெரிய ராமர் கோவிலில் 35 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் விநாயகா் சிலை உள்ளது. இந்த கோவிலில் கடந்த சனிக்கிழமை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஐம்பொன் சிலை மற்றும் 3 கிராம் தங்கத் தாலியை திருடி சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிலையைத்திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.