வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்!

 

வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் மழை நீரில் தத்தளிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நிவர் புயல் கடந்த சில நாட்களாக தமிழகத்தை புரட்டி போட்டு விட்டது. சூறைக்காற்று, கனமழை என மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். சாலைகளில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நிவர் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் குளிர் காற்று வீசி வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்!

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் மழை நீரில் மிதக்கிறது. சென்னை – திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து செல்லும் பேருந்துகள் முக்கிய சந்திப்பாக பார்க்கும் இடம் விழுப்புரம். இங்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் . நிவர் புயல் காரணமாக கடந்த 24ஆம் தேதி மதியம் 1 மணி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பேருந்து சேவையை நிறுத்தியது. இதையடுத்து பலத்த மழை பெய்த காரணத்தினால் விழுப்புரம் பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது . சுமார் 3 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக அப்பகுதி காட்சியளித்தது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்!

இதனால் பேருந்துகள் பழுதடையாமல் பாதுகாக்க, ஓட்டுநர்கள் பேருந்துகளை சாலையில் நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீரை உடனே அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.