விழுப்புரம் மாவட்ட தேர்தல் உதவி மையத்தில், பொதுப் பார்வையாளர் ஆய்வு!

 

விழுப்புரம் மாவட்ட தேர்தல் உதவி மையத்தில், பொதுப் பார்வையாளர் ஆய்வு!

விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக மையம் மற்றும் தேர்தல் உதவி மையத்தை, மாவட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர் வினோத்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ள செலவின பார்வையாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் உதவி மையத்தில், பொதுப் பார்வையாளர் ஆய்வு!

இந்த நிலையில், செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகளுக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் வினோத்குமார், நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊடக கண்காணிப்பு மையம் மற்றும் வாக்காளர் உதவி மையம் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து, ஆட்சியர் அண்ணாதுரை, பொதுப் பார்வையாளர் வினோத்திடம் விளக்கம் அளித்தார்.