“அந்த பீகார்காரன் போனா தான் அறிவாலயத்துல கால் வைப்பேன்” – பிகேவால் சீறிய திமுக எம்எல்ஏ

 

“அந்த பீகார்காரன் போனா தான் அறிவாலயத்துல கால் வைப்பேன்” – பிகேவால் சீறிய திமுக எம்எல்ஏ

வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு அதிமுகவுக்குள் பெரிய பிரளயம் வெடித்தது. இரண்டு சிட்டிங் எம்எல்ஏக்கள் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவிக்க கட்சியை விட்டே தூக்கியெறிந்திருக்கிறார்கள் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும். ஆனால் திமுகவுக்குள் அந்தளவிற்கு பெரிய களேபரங்கள் நடைபெறா விட்டாலும் தீப்பொறிகள் ஆங்காங்கே பரவிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் திமுகவில் தற்போது இருக்கும் 79 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 12 பேருக்கு கல்தா கொடுக்கப்பட்டிருக்கிறது.

“அந்த பீகார்காரன் போனா தான் அறிவாலயத்துல கால் வைப்பேன்” – பிகேவால் சீறிய திமுக எம்எல்ஏ

அதிமுகவில் ஏற்பட்ட களேபரங்கள் போல திமுகவுக்குள் ஏற்படவில்லை என்றாலும் கூட தேர்தல் பணி செய்யாமல் புதிய வேட்பாளர்களைக் கவுத்தி விடுவார்களோ என்ற அச்சம் தலைமையைத் தொற்றியுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே அமர வைக்கப்பட்டுள்ள 12 சிட்டிங் எம்எல்ஏக்களையும் சரிக்கட்டும் வகையில் சமாதான தூது விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் வில்லிவாக்கம் எம்எல்ஏ ரங்கநாதனிடம் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி போன் செய்திருக்கிறார்.

“அந்த பீகார்காரன் போனா தான் அறிவாலயத்துல கால் வைப்பேன்” – பிகேவால் சீறிய திமுக எம்எல்ஏ

எடுத்த எடுப்பிலேயே சீறியிருக்கிறார் ரங்கநாதன். “அந்த பீகார்காரன் ( பிரசாந்த் கிஷோர்) என்னை ரவுடின்னு சொல்லியிருக்கிறான். அதை கேட்டுட்டு என்ன நீங்க ஓரங்கட்டிட்டீங்க. இத்தனை நாள் கட்சியில் இருந்தப்போ இதெல்லாம் தெரியலையா? எங்கிருந்தோ வந்தவன் பேச்சை கேட்டு என்னை அவமானப்படுத்திட்டீங்க. என் கொதிப்பு அடங்கவில்லை. இனி அந்த பீகார்காரன் போன பிறகுதான் அறிவாலயத்திற்கே வருவேன். இதற்காக நீங்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி” என பட்டாசாக வெடிக்க நமக்கு எதுக்குடா வம்பு என்ற நினைத்து பாரதி போனை சத்தமில்லாமல் வைத்துவிட்டாராம்.

“அந்த பீகார்காரன் போனா தான் அறிவாலயத்துல கால் வைப்பேன்” – பிகேவால் சீறிய திமுக எம்எல்ஏ

ரங்கநாதனுக்கு சீட் மறுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

ரங்கநாதனுக்கு வயோதிகத்தைக் காரணம் காட்டி சீட் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு தற்போது வயது 70 ஆகிறது. இருப்பினும் இவர் மீது பல நில அபகரிப்பு புகார்கள் இருப்பதால் தான் மறுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆட்சி அமைந்த பின் இதுபோன்ற அடாவடியில் இறங்கி கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிடுவார் என்ற அச்சத்தால் சீட் மறுக்கப்பட்டுள்ளது. “சாகும் போதும் எம்எல்ஏவாக தான் சாவேன்” என அடிக்கடி கட்சிக்காரர்களிடம் சொல்வாராம்.