500 ஆண்டு கால புராதான சிறப்பு மிக்க வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலய வரலாறு!

சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலயம் 500 ஆண்டு கால புராதான சிறப்பு மிக்கது. புராண கால பிரசித்தியும் பெற்றது. கைலாய்த்தில் இருந்து தென்னகம் வந்த அகஸ்யர் வழி எங்கும் சிவலிங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவை இன்றும் அகத்தீஸ்வரர் என்ற பெயரில் ஆலயங்களாக எழுந்து காலங்களை கடந்து அருள் வழங்குகின்றன. சென்னை சுற்றியும் சென்னையிலும் அகஸ்தியர் வழிபட்ட பல தலங்களும் திருக்கோயில்களும் உள்ளன .அவை ஒவ்வொன்றும் ஒரு தனி சிறப்புகளைக் கொண்டது.

சென்னையில் அகத்தியர் வழிபட்ட தலங்களில் வில்லிவாக்கமும் ஒன்று. அகஸ்தியர் வழிபட்ட ஈசன் என்பதால் இங்கும் சிவபெருமான், அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் மூலவராக இருக்கிறார்.

பரமசிவனுக்கும் பார்வதிதேவிக்கும் மேருமலைச் சாரலில் திருமணம் நடைப்பெற்றபோது தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், யோகிகளும் மனிதர்கள் மற்றும் சகல ஜிவராசிகளும் ஒரே இடத்தில் கூடியதால் வடக்கு நாழ்ந்து தெற்கு உயர்ந்தது . ஜீவராசி சரிந்து பாதாளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டது . ஜீவராசி துன்பத்திற்கு ஆளாவதை, அதுவும் தம் திருமணத்தை காண வந்த கண்டு ஜீவராசிகள் துன்பத்திற்கு ஆளாவதை பொறுப்பான ஈசன். சம நிலைப்படுத்தும் பொருட்டு குள்ளமுனிவரான அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கி அனுப்பி வைத்தார்.

தென்னகம் வந்த வழியில் அந்நாளில் வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் வாழ்ந்த வில்வலன், வாதாபி என்ற அசுர சகோதரர்களை சந்திக்க நேர்ந்தது. அந்த அசுரர்கள் அந்த வழியே வரும் முனிவர்களை தந்திரமாக சென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அகத்தியரை கண்டு மகிழ்ந்த அசுரர்கள் அவரையும் உண்ண திட்டமிட்டனர். அதை உணர்ந்த அகஸ்தியர் அவர்களுக்கு பாடம் புகட்டினார். வாதாபி மாயத்தால் மாம்பழம் ஆக மாறினான். அதை உண்ணுமாறு விருந்துக்கு அகஸ்தியரை அழைத்தான் வில்லவன். அதை அகஸ்தியர் உண்பார் அவர் வயிற்றுக்குள் மாம்பழமாய் போன வாதாபி சுயஉரு பெற்று அகஸ்தியர் வயிற்றை கிழித்து அவரை கொல்வான். பின்னர் இருவரும் அவரை சாப்பிட்டு சந்தோஷப்படலாம் என திட்டமிட்டனர்.

ஆனால் அந்த மாய மாம்பழத்தை உண்ட அகஸ்தியர் மாம்பழமாய் இருந்த அசுரன் வாதாபியை தன் ஆற்றலால் ஜிரணித்து விட்டார். அதனால் ஆத்திரமடைந்து தன் மீது பாய்ந்த அசுரன் வில்லவனை தன் தண்டத்தால் தாக்கிக் கொன்றார் அகஸ்தியர். அசுரர் பயத்தில் இருந்து அப்பகுதி மக்களும் வழிப்போக்கர்களும் விடுபட்டனர் என்றாலும் அசுரர் கொன்ற தோஷம் அகஸ்தியரை பிடித்துக் கொண்டது.

அசுரர்களை கொன்ற தோஷம் நீங்க ஈசன் அருள் வேண்டி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் அகஸ்தியர். அதுவே இன்றும் அகஸ்தீஸ்வரர் சிவலிங்மாக வில்லிவாக்கம் கோயில் உள்ளது.

அதோடு அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது அம்பாள் திருமண கோலத்தில் பொன் நகைகள் அணிந்திருந்தாள். எனவே வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் அம்பாள் ஸ்வர்ணாம்பிகை எனக் கொண்டாடப்படுகிறாள்.

நவக்கிரகங்களில் அங்காரகன் [செவ்வாய்] தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கத் தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலமும் இதுவே. அதனால் செவ்வாய் தோஷப் பரிகாரத் தலமாவும் வில்லிவாக்கம் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். ஆடி மாதம் ஐந்து வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்கே வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

வீரபத்திரருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளது. குபேர திசை நோக்கி வீரபத்திரர் அமர்ந்துள்ளதால் ஜஸ்வர்ய வீரபத்திரராக விளங்குகிறார் . அகஸ்தீஸ்வரர் கோயிலின் தெற்குவாசல் எதிரே வீரபத்திரர் ஆலயம் உள்ளது. கோரைப் பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவர் அருகே வணங்கிய கோலத்தில் தட்சன் உள்ளார். முன் மண்டபத்தில் பத்திரகாளி சன்னதியும் உள்ளது.

அன்புடன் தன்னை வந்து அடைந்தார்க்கு அருள்கூட்டும் திருத்தலம் இது. இத்திருத்தலத்தின் சிறப்பை அறிந்து வணங்க வருபவர்களுக்கும், அறியாமலேயே இக்கோவில் இருக்கும் இடத்தின் எல்லையில் கால் பதிப்பவருக்கும் பெரும்பலன் தரும் திருத்தலமாக அறியப்படுகிறது.

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் அகஸ்தியருக்கு வழ்ங்கியது போலவே இன்றும் தன்னை வணங்கு பக்தர்களுக்கு எல்லா தோஷங்களையும் நீக்கி சந்தோஷங்களை அருள்பவராக விற்றிரீக்கிறார். எல்லாம் ஈசனருள் நமசிவாய வாழ்க.

-மு.ரா.சுந்தரமூர்த்தி.

Most Popular

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் மேலும் 95...

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...