ரூ.2000 நிவாரணம் வழங்க லஞ்சம்… ரேஷன் ஊழியரை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம்!

 

ரூ.2000 நிவாரணம் வழங்க லஞ்சம்… ரேஷன் ஊழியரை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம்!

மதுரை

திருமங்கலம் அருகே கொரோனா நிவாரண நிதி வழங்க, ரேஷன் கடை ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக கூறி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சின்னகட்டளை கிராமத்தில் அரசின் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் 1,200 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் அறிவிப்பின் படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 வழங்கும் பணி நடைபெற்று வந்தது.

ரூ.2000 நிவாரணம் வழங்க லஞ்சம்… ரேஷன் ஊழியரை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம்!

இந்த நிலையில், கடை ஊழியர் பாண்டி என்பவர், பொதுமக்களுக்கு வழங்கும் தொகையில் ரூ.200 லஞ்சம் பெற்றுக் கொண்டு ரூ.1,800-ஐ மட்டும் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று லஞ்சம் பெற்ற ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசின் நிவாரண தொகை மட்டுமின்றி பொருட்கள் வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுவதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.