“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா

“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா

திருச்சி

காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, வியாபாரிகளுக்கு சாதகமாக வராதபட்சத்தில், தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அச்சங்கத்தின் மாநில தலைவராக விக்கிரமராஜா மற்றும், பொதுச்செயலாளராக கோவிந்தராஜூலு ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதால், காந்தி மார்கெட் திறக்கப்படாமல் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு வழக்கை முடிவுக்குக்கொண்டு வந்து, வியாபாரிகளுக்கு சாதகமான தீர்ப்பு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா

மேலும், இதனை வலியுறுத்தி இன்று மாலை முதல் திருச்சியில் உள்ள காய்கறி, பழ மார்க்கெட்டுகள் முழுமையாக அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெறும் என தெரிவித்த விக்கிரமராஜா, வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வியாபாரிகளுக்கு சாதகமாக வராதபட்சத்தில் தமிழகம் முழுதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.