வணிகர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் – விக்கிரமராஜா கோரிக்கை!

 

வணிகர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் – விக்கிரமராஜா கோரிக்கை!

கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்கள பணியாளர்களாக கடந்த அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் தமிழகத்தில் ஆட்சி அமைத்த திமுக அரசு, பத்திரிகையாளர்களையும் மின் மயானத்தில் வேலை செய்யும் ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்தது. இந்த நிலையில், வணிகர்களையும் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிகர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் – விக்கிரமராஜா கோரிக்கை!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1.10 கோடி காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, நலிந்த வணிகர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்த வணிகர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சுற்றுலாத் தலங்களில் உள்ள வணிகர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து நகைக் கடை, செருப்புக் கடை, துணிக்கடை உள்ளிட்ட அனைத்தையும் திறக்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த அவர், வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் தான் முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.