முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க கடைகளை அடைக்கத் தயார்- வணிகர் சங்க பேரவை

 

முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க கடைகளை அடைக்கத் தயார்- வணிகர் சங்க பேரவை

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்த பாடில்லை மாறாக பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை அங்கு 25,937 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,507 சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 12,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் சென்னையில் மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க கடைகளை அடைக்கத் தயார்- வணிகர் சங்க பேரவை

இந்நிலையில் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, “சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் சென்னையில் பொதுமக்கள் வணிகர்கள் நலன் கருதி குறைந்தது 15 தினங்கள் சென்னையில் முழு ஊரடங்கிற்கு அரசு உத்தரவிட்டால் அடைகளை அடைக்கத் தயாராக இருக்கிறோம், அரசு உத்தரவிட்டால் கடைகலை அடைப்போம். தமிழக அரசின் நிதித்துறை செயலாளரிடம் நேரில் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.